Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மூங்கில்துறைப்பட்டு-தென்பெண்ணையாற்றில்,மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மின் ஊழியர்…இரவு பகலாய் தேடும் பணி தீவிரம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டுஇளமின் பொறியாளர் அலுவலகத்தின் கீழ்தற்காலிக பணியாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திலீப்குமார் என்பவர்வேலை செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த 12தேதி  மூங்கில்துறைபட்டு பகுதியில் இருந்து அருகில் உள்ள வாழவச்சனூர் பகுதிக்கு தென்பெண்ணையாற்றின் இடையே மின்கம்பி  இழுக்கும் பணியின் போது  தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரை கடந்த ஆறு நாட்களாக சங்கராபுரம் தீயணைப்பு நிலைய தலைமை அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் திருக்கோவிலூர் தியாகதுருவம் மணலூர்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஐந்து குழுக்களாக ஆகப் பிரிந்து  30க்கும் பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணைஆற்றுப்பகுதியில் ட்ரோன் கேமரா ரப்பர் படகுகள் மூலம் கடந்த ஐந்து நாட்களாக தேடி வந்த நிலையில் இதுவரை மாயமான திலீப்குமார் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் 30 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்களில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தென்பெண்ணைஆற்றில் இரவு பகல் பாராமல் மின்வாரிய தற்காலிக ஊழியர் திலீப் குமாரை தேடி வரும் நிலையில்தற்போது இருபத்தைந்தும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுஉடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மின்வாரிய தற்காலிக ஊழியரைதேடும் பணி தோய்வுஏற்பட்டு வருகிறது இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மூங்கில்துறைப்பட்டு தற்காலிக மின்வாரிய ஊழியரை தேடுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என மின்வாரிய தற்காலிகஊழியரின் உறவினர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
– இரா.நந்தகோபாலகிருஷ்ணன்