மதுரை, மாவட்டம் உசிலம்பட்டி சார்பதிவாளர் அலுவலக சுவற்றில் டிடிவி தினகரன் விளம்பரம் வரைய எதிர்ப்பு தெரிவித்த திமுகவினருடன், அமமுகவினர் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் இயங்கி வருகிறது. உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகம். இந்த அலுவலக சுவற்றில், அடுத்த மாதம் வரும் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அமமுகவினர் அவர் உருவ படத்துடன் சுவர் விளம்பரம் வரைந்து கொண்
டிருந்தனர்.
இது குறித்து சார் பதிவாளர் ஜியாவுதீன் அரசு அலுவலக சுவற்றில் அரசியல் கட்சியின் விளம்பரம் வரைய
கூடாது என, கூறியதுடன், உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரி
வித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து, அறிந்து நேரில் வந்த திமுக நிர்வாகிகளும், சார் பதிவாளரிடம் சுவர்
விளம்பரம் வரை அனுமதிக்க கூடாது என முறையிட்டனர்
அப்போது, அமமுகவினர், திமுகவினரிடம் திடீரென வாக்கு
வாததில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் அரசு அலுவலக சுவற்றில் அரசியல் கட்சி விளம்பரங்கள் வரைய
கூடாது என, அமமுகவினரிடம், தெரிவித்ததோடு,
அச் சுவர் விளம்பரத்தை அழிக்க வேண்டு
மென கேட்டுக் கொண்டனர்.
பரபரப்பாக காணப்படும் மதுரை ரோடு பகுதியில் அமமுக – திமுக வினர் வாக்குவாதம் செய்து
கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply