நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பழக் கடை வைத்திருப்பவர் திரு மாதேஸ்வரன் 📱9952309636 இவர் மிகச்சிறந்த தகவல் உரிமை சட்ட போராளி, நல்ல சமூக ஆர்வலர், ராசிபுரம் புதிய பேருந்து நிலைய நகராட்சி கடை வாடகைதாரர்கள் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருபவர், லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக இராசிபுரம் நகராட்சியில் நடக்கும் ஊழல் மீது நடவடிக்கையில் எடுக்க நீண்ட காலமாக தொடர்ச்சியாக புகார்கள் செய்து வருபவர். ஏற்கனவே ராசிபுரம் நகராட்சியில் லஞ்சம் பெற்ற நகராட்சி பணியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாக பிடித்து கைது செய்வதற்கு இவருடைய முயற்சி காரணம் என்பது ராசிபுரம் நகர மக்கள் அறிந்தது.
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்ற போராட்டத்தில் திரு மாதேஸ்வரன் முழுமையாக அர்ப்பணிப்பாக உறுதியாக போராட்ட களத்தில் செயல்பட்டு வருகின்றார்.
ராசிபுரம் நகராட்சி மிக மோசமான நிதி நிலையில் உள்ளது நகராட்சியின் துப்புரவு பணியாளர்களுக்கு கூட சம்பளம் வழங்க முடியாத அளவிற்கு நகராட்சியின் நிதி நிலைமை பற்றாக்குறையில் உள்ளது
ராசிபுரம் நகராட்சி கடந்த ஆண்டு பொது ஏலம் மூலம் தினசரி மார்க்கெட் உள்ளிட்ட நகராட்சி சொத்துக்களை ஏலம் விட்டு குத்தகைதாரர் வசம் ஒப்படைத்துள்ளது ஏலம் எடுத்துள்ள குத்தகைதாரர்கள் ஏலம் எடுத்த ஒரு வார காலத்திற்குள் முழு தொகையும் நகராட்சியிலும் செலுத்தி பிறகுதான் குத்தகை உரிமைத்தை பெற முடியும் பயன்படுத்த முடியும் ஆனால் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நகராட்சியில் செலுத்த வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தொகையை குத்தகைதாரர்கள் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
தினசரி மார்க்கெட் கடை குத்தகைதாரர் 10 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது ஆடு அடிக்கும் தொட்டி குத்தகைதாரர் ஒரு லட்சத்து 62 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது கோழி மட்டும் மீன் இறைச்சி கடை ஒப்பந்ததாரர் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தினசரி மார்க்கெட் கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரர் 2 லட்சத்து 20 ஆயிரம் புதிய பேருந்து நிலைய சைக்கிள் நிறுத்துமிடம் ஒப்பந்ததாரர் 9. 27,000 பாக்கி உள்ளது. புதிய பேருந்து நிலைய கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரர் 10 லட்சம் புதிய பேருந்து நிலைய ஒலிபெருக்கி ஒப்பந்ததாரர் 2 லட்சம் பழைய பேருந்து நிலைய கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரர் 99 ஆயிரம் செலுத்த வேண்டிய பாக்கியத்தொகை நிலுவையில் உள்ளது இந்தத் தொகை அனைத்துமே 2024 மார்ச் மாதத்திற்கு முன்பு செலுத்தி வேண்டிய தொகை இந்த தொகை செலுத்திய பிறகு தான் அவரிடம் குத்தகை ஒப்படைத்திருக்க வேண்டும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் பினாமி பெயரில் குத்தகை உரிமை பெற்றிருப்பதால் குத்தகைத் தொகை பெற்றுக் கொள்ளாமலேயே நகராட்சி அவர்களுக்கு குத்தகை உரிமத்தை சட்டவிரோதமாக வழங்கி உள்ளது
ஏலம் விடப்படாத குத்தகைவிடப்படாத இனங்களில் நகராட்சி பணியாளர்கள் நேரடியாக வசூல் செய்யும் பணத்தை நகராட்சியில் செலுத்தாமல் ஊழல் செய்வதை கண்டுபிடித்து புகார் செய்துள்ளார்
இதற்கு நகராட்சி நிர்வாகம் ஆதரவாக செயல்பட்டுள்ளது இந்த மிகப்பெரிய ஊழலை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கண்டறிந்து நகராட்சி நிர்வாகத்திடமும் தமிழக அரசிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் திரு மாதேஸ்வரன் புகார் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் புகார் செய்துள்ளார் இது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தில் பல்வேறு மனுக்களை கொடுத்துள்ளார் அதில் ஒரு மனுவில் நகராட்சி ஒன்றிய பொது தகவல் அலுவலரான நகராட்சி மேலாளர் ராமசந்திரன் நேரில் வந்து தகவலை விளக்கம் தெரிவித்து பெற்றுக் கொள்ளும்படி பதிலளித்திருந்தார். நகராட்சி மேலாளர் கடிதத்தில் தெரிவித்திருந்தது போல் விவரங்களை நகராட்சி மேலாளர் தெரிவிப்பதற்காக நகராட்சி மேலாளருக்கு தெரிவிக்க நகராட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்த திரு மாதேஸ்வரன் அவர்களிடம் நகராட்சி மேலாளர் ராமசந்திரன் ஒருமையில் பேசி ஏளனப்படுத்தி தீட்டி அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் நகராட்சி பணியாளர்களுக்கு நன்கு தெரியும் உண்மை இவ்வாறு இருக்க நகராட்சி மேலாளருக்கு திரு மாதேஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அரசு பணியினை செய்வதை தடுத்ததாகவும் பொய்யான புகாரினை ஆளுங்கட்சியினர் தூண்டுதல் பேரில் கொடுத்து காவல்துறை மூலம் பொய் வழக்கு வழக்குப்பதிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தொடர்ச்சியாக ராசிபுரம் பேருந்து நிலைய பிரச்சினைகள் போராடிவரும் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குகள் தொடர்ந்து பதிவுப்பட்டு வருவது தமிழக அரசின் மீது ராசிபுரம் நகர மக்களுக்கு வெறுப்பை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறையும் தமிழக அரசும் நேர்மையாக வழக்கு விசாரணை நடத்தி பொய் வழக்கு கொடுத்த ராசிபுரம் நகராட்சி ஆணையர் கணேசன் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து நீதி நிலைநாட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.
-சங்கர்ஜி
