சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நிலத்தை போலியாக பதிவு செய்து பதிவு செய்ததாக தமிழ் மாநில காங்கிரஸ் தென்மண்டல ஐஜி இடம்புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சாக்கோட்டை ஒன்றியதிமுக கவுன்சிலர் சொக்கலிங்கம் புகார் அளித்தார். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காவல் நிலைய எல்லைக்ககுட்பட்ட அழகாபுரி கிராமத்தில் கே.சுந்தரம் என்பவருக்குச் சொந்தமான 47 சென்ட் நிலம் இருந்துள்ளது . இரண்டு முறை காரைக்குடி எம்.எல்.ஏ.வாக இருந்தழி. சுந்தரம், வேறு ஒரு ளீ.சுந்தரம் என்பவருக்குச் சொந்தமான சொத்து அது என்பதை அறிந்து, 2023-ம் ஆண்டு, பதிவுத் துறை ஊழியர்களுடன் சேர்ந்து, அந்த நிலத்தை, கே.சுந்தரம் என்று ஆதார் அட்டையை போலியாக உருவாக்கி, தனது மகனின் பெயரில் தான செட்டில்மென்ட் பதிவு செய்தார். அந்த இடத்தின் உண்மையான உரிமையாளர் வந்து மேற்படி சொத்துக்கு உரிமை கோரிய பின்னர், பிரச்னை வெளியில் தெரியவந்தது. 2024 நவம்பரில், முன்னாள் எம்எல்ஏ தன் மகன் பெயரில் செய்து இருந்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்தார்.
“எம்.எல்.ஏ சுந்தரம், பதிவுத்துறை ஊழியர்கள் மற்றும் பதிவில் கையெழுத்திட்ட சாட்சிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்,” என்று சொக்கலிங்கம் கூறினார்.
முன்னாள் எம்எல்ஏ ழி. சுந்தரம் இந்த பிரச்சினை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த புகாரை சிவகங்கை எஸ்பி அலுவலகத்திற்கு ஐஜி அலுவலகம் அனுப்பி வைத்தது, அங்கு வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதன் காரணமாக மக்களிடம் முக்கிய அரசியல்வாதியின் பினாமி என கூறப்பட்டவர் இப்பொழுது அந்த முக்கியமானவரை விட்டு விலகியதால் அவர் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்கின்றனர்.
– பாபு
Leave a Reply