Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நாமக்கல்-ஹிந்து சமய அறநிலையத்தறை அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகை…அத்துமீறிய காவல்துறையினர்?

நாமக்கல் மாவட்டத்தில் ‘விளை நிலத்தை பொது ஏலம் விடுவதையும், ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதையும் கண்டித்து, ஹிந்து சமய அறநிலையத்தறை அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா, பொத்தனுார் கிராமத்தில், 12.42 ஏக்கர் நிலம், 100 ஆண்டுகளுக்கு மேல் சிலரின் அனுபத்தில் இன்று வரை இருந்து வருகிறது. மேலும், இந்த நிலத்தின் ஆவண உரிமை மற்றும் அனுபவ உரிமை இதுவரை, அவர்களிடம் இருப்பாக கூறப்படுகிறது.
கடந்த, 1967ல் இருந்து, 1997 வரை, சுத்த கிரையம் பெற்றுள்ள ஆவணங்களும் வைத்துள்ளனர். இது தொடர்பாக, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது உபயோகத்தில் உள்ளவர்கள் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலம், பொத்தனுார் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றாலும், ஹிந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இந்நிலையில், பல ஆண்டுகளாக அனுபவத்தில் உள்ள நிலத்தை, ஹிந்த சமய அறநிலையத்துறையினர், பொது ஏலம் விடுவதாக அறிவித்தனர்.
அதற்கு, அனுபவத்தில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொது ஏலத்தில் கலந்து கொள்ள, நாமக்கல்லில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்களை ஆக்கிரமிப்புக்காரர்கள் எனக்கூறி, பொது ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. அதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள், அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

– சங்கர்ஜி