கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் உள்ள காலியிடங்களை விரைந்து நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலுள்ள மலைப் பகுதிகள் கல்ராயன்மலை என்று அழைப்படுகிறது. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியும். பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலமான பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1,095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2,000 முதல் 3,000 அடி வரை உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கல்ராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி ‘சின்னக் கல்ராயன்’ மற்றும் தென்பகுதி ‘பெரிய கல்ராயன்’ என்று குறிப்பிடப்படுகின்றது.
‘சின்னக் கல்ராயன்’ மலைகள் சராசரியாக 2,700 அடி உயரமும், ‘பெரிய கல்வராயன்’ மலைகள் சராசரியாக 4,000 அடி உயரமும் கொண்டவை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், ஊராட்சி ஒன்றியத்தின் இருப்பிடம் சவ்வாதுமலையின் தெற்கு முனையிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலைகள் உள்ளது. இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், மேற்குப்பகுதி தர்மபுரி மாவட்ட வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.
கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன.
சேலத்தில் இருந்துவரும் வழியில் கல்ராயன்மலை அடிவாரத்தில் கரியகோயில் நீர்தேக்கமும், அதையொட்டி பூங்காவும் உள்ளது.
கள்ளக்குறிச்சி வரும் வழியில் கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் பூங்காவும் உள்ளது.
தமிழ்நாட்டின் ஏழைகளின் மலை பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சில கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு கோடை விழாவை நடத்துகிறது.
ஆனால் இங்குள்ள மக்களுக்கு என்ன பிரச்சனை என்றால் பொருளாதார ரீதியாக வங்கி கடன் விவசாய நலத்திட்டங்கள் என பல இருந்தும் இங்கு வசிக்கும் மக்களால் அரசு திட்டத்திலும் சரி வங்கி கடனிலும் சரி பயன் பெற முடியாத சூழ்நிலை தான் இருந்து வருகிறது இதனால் இங்குள்ள மக்கள் இடம் பெயர்ந்து பிழைப்பு நடத்துவதற்காக வெளிமாநிலம் சென்று சட்ட விரோதமாக செம்மரம் சந்தன மரம் வெட்டும் தொழிலிலும் உள்ளூரில் சாராயம் காய்ச்சுவது என இதுபோன்று வேலைகளுக்கு தவறான பாதையில் செல்லும் சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியை திமுக எம்எல்ஏ உதயசூரியன் கட்டுப்பாட்டில்தான் கல்வராயன் மலை இருந்து வருகிறது. ஆனால் அரசு நலத்திட்டங்களில் மக்களுக்கு முழுமையாக சென்றதா என்றால் கிடையாது
இந்த மலைப்பகுதியில் 15 ஊராட்சிகளும் சுமார் 56 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் வரை மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடந்த விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த வழக்கில், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கும், சிபிஐ விசாரணை கோரி தமிழக வழக்கும் ஒன்றல்ல என நினைப்பதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், அந்த வழக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கு கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக பொருளாதாரம் சார்ந்தது எனத் தெரிவித்தார். மேலும், ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட, 95 சதவீதம் பழங்குடி மக்கள் வசிக்கும் கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் தமிழ்மணி, அரசு அதிகாரிகள், அரசை பாதுகாக்கும் வகையில் அறிக்கை அளிப்பர் என அச்சம் தெரிவித்த மேலும் அவர், அந்த பகுதியில் பேருந்து வசதியில்லை. மருத்துவமனைகள் இல்லை.
பிரசவத்தின் போது பெண்களை 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோளில் சுமந்து செல்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, உண்மை தகவல்களை அறிக்கையாக அளிப்பதை உறுதி செய்ய நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், 1996 முதல் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசுகள், அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கியிருக்கிறதா? இல்லையா? இதை கவனிப்பது அரசின் அரசியலமைப்பு சட்ட கடமை அல்லவா எனத் தெரிவித்த நீதிபதிகள், அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டனர்.
1947 முதல் நாம் உரிமைகளை அனுபவித்து வருகிறோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், 1976 ல் இருந்து தான் அவர்கள் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் நாமும் அங்கிருந்து கஷ்டங்களை உணரவேண்டும். அரசின் நலத் திட்டங்கள் அந்த மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இத்தனை ஆண்டுகளாக ஆட்சியர், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் என்ன செய்கின்றனர் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, மலைவாழ் பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா? விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால் இந்த மலைப்பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளிகள். அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள். சாலை வசதிகள் ஏதுமில்லாமல் மக்களின் நிலமை சுதந்திரதிற்கு முன்பு எப்படி இருந்தார்களே அப்படியே தான் உள்ளனர். மேலும் கல்வராயன் மலைப்பகுதியில் கடுக்காய் அதிகளவு விளைந்து வருகிறது. அந்த கடுக்காயை அதிக அளவு பயன்படுத்தப்படும் சித்த மருத்துவத்திற்கு தேவை அதிகமாக உள்ளது. அரசு கடுக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை இங்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து சித்த மருத்துவத்திற்கு உதவிட வேண்டும். இங்கு கள்ளச்சாராயம் தயாரிக்க முக்கிய பொருளாக கடுக்காயை பெருமளவு பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. கடுக்காய் தொழிற்சாலை இங்கு கொண்டு வரப்படும் என்று ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் கடுக்காய் தொழிற்சாலை அரசியல் வாதிகளுக்கு ஞாபகம் வரும் ஆட்சிக்கு வந்தவுடன் ஞாபகமறதியால் பாதிக்கட்டு மறந்து விடுவதாக இம்மகளின் குற்றச்சாட்டு ஆகும்.
கல்வராயன் மலையில் வாகனங்கள் செல்லும் வகையில், சாலை வசதிகள் முழுமையாக இல்லை.
ஆம்புலன்ஸ்கள் செல்லும் வகையில் சாலை வசதிகள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் மலைவாழ் மக்களுக்கு எதிராக வனத்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது” எனவும்
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க, நான்கு வாரங்களில் அரசு சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும். சாலை வசதிகள், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கல்வராயன் மலையில் மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசு தரப்பில் விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை இதுவரை மாநில அரசு மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டதா மக்களின் புலம்பலாக இருந்து வருகிறது
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது அவர் ஒரு சில வேலைகளை மட்டும் நடைபெற்று வருவதாகவும் ஆசிரியர் மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை அரசுதான் முடிவு செய்யும் எனவும் அரசிடம் இருந்து இதுவரை அரசாணை ஏதும் வரவில்லை எனவும் அப்பகுதியில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கல்வராயன் மலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கல்வராயன் மலை பகுதிகளுக்கு ட்ரைபல் பிஓ சுந்தரம் என்ற அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து கேட்டறிந்த போது ஆசிரியர் பணியானது தற்காலிக ஆசிரியர்களை பணியில் நிரப்பி உள்ளதாகவும் மேலும் இரண்டு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணி நியமனம் செய்யவில்லை எனவும் இன்னும் ஆறு நாட்களில் அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.
அப்பகுதி மக்களின் ஒருவரான தமிழ்நாடு பழங்குடி சங்க மாவட்ட தலைவர் கஜேந்திரன் நீதிமன்ற உத்தரவு குறித்து இதுவரை என் அளவு கூட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்த வண்ணம் அரசு அதிகாரிகள் இருந்து வருகிறார் இந்திய சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் இன்னும் இப்பகுதிக்கு சாலை போக்குவரத்து படிக்கும் பள்ளிகளுக்கு சுகாதாரமான உணவு கட்டிட வசதி இப்பகுதியில் இருக்கக்கூடிய கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கான வசதி இல்லாமல் பல மைல்கள் நடந்து செல்லும் அவலமும்
அதேபோல இங்கு உள்ள மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதால் ஒரு சிலர் சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்து வருவதாகவும் சமவெளியில் இருக்கக்கூடிய வசதி போல் மலை மீது இல்லை எனவும் கூறினார்.
அரசு அதிகாரிகள் மலை மக்கள் மீது அவர்களின் பொருளாதார கல்வி மருத்துவம் சாலை வசதி என அடிப்படை வசதிகள் அனைத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகம் மட்டுமல்ல தமிழ்நாடு அரசும் தனி கவனம் செலுத்தி முக்கியத்துவம் கொடுத்து இத்தேவைகளை பூர்த்தி செய்து மலையில் வாழக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிநடவடிக்கை எடுத்தால் மட்டும் சட்டத்துக்கு புறம்பாக செய்யக்கூடிய வேலையான சாராயம் காய்ச்சுவது செம்மரம் கடத்துவது குற்றச்செயலில் ஈடுபட்டு துப்பாக்கி குண்டுக்கு பலியாவது இறந்து விடுகின்றனர் இது போன்ற தொழில் செய்வதால் ஒட்டுமொத்த மலை வாழ் மக்களுக்கும் அவபேர் ஏற்படுவதாகவும் தவிர்க்க வேண்டும் என்றால் வாய்ப்பு அரசு உருவாக்கி தரவேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார்.
—-டார்வின் கிராம்ஷி….
Leave a Reply