2022 அக்டோபரில் நடந்த கொலை சம்பவ வழக்கில் தீர்ப்பு
2 மாதத்தில் 10 முறை காதலனை கொலை செய்ய முயன்றதாக காதலியே வாக்குமூலம் அளித்திருந்தார்
க்ரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது
கிரீஷமா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு தாயார் சிந்துவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு நாளை இருவருக்கும் தண்டனை விதிக்கப்படும் என நெய்யாற்றின்கரை நீதிமன்றம் அறிவித்துள்ளது
குமரி கேரளாவை உலுக்கிய காதலனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கு கடந்து வந்த பாதை
குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் 24, குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றி படித்து வந்த இவர் தன்னுடன் களியக்காவிளையில் இருந்து பேருந்தில் கல்லூரிக்கு வரும் இராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த க்ரீஷ்மா என்ற பெண்ணை காதலிக்கத்துவங்கி உள்ளார் ஒரு கட்டத்தில் இருவரும் கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்
இந்த காலகட்டத்தில் ஷாரோன் கையால் தாலி கட்டிய க்ரீஷ்மா அவ்வப்போது திற்பரப்பு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கணவன் மனைவி போல் இருவரும் தங்கி இருந்து வந்துள்ளனர் இந்த நிலையில் க்ரீஷ்மாவிற்கு இராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது இதனையடுத்து அரசு வேலையுள்ள ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தடையாக காதலன் ஷாரோன் இருந்து விடக்கூடாது என எண்ணிய க்ரீஷ்மா ஷாரோனுக்கு பலமுறை ஜூஸ் சேலஞ்ச் என்று கூறி அதனுள் மாத்திரை மருந்துகள் கலந்து குடிக்க செய்து கொலை செய்ய முயன்றுள்ளார் இவற்றில் எல்லாம் ஷாரோன் தப்பித்த நிலையில் யாருக்கும் சந்தேகம் வராது முறையில் ஷாரோனை எவ்வாறு கொலை செய்வது என்பதை கூகுலில் தேடிய க்ரீஷ்மா விவசாயா நிலங்களில் வளரும் களைகளை ஒழிக்க பயன்படுத்தப்படும் கொடிய விஷம் கொண்ட மருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அது எவ்வாறு பலன் செய்யும் என்பதையெல்லாம் படித்து வைத்துவிட்டு அந்த கொடிய விஷத்தை மருந்து கடைக்கு சென்று வாங்கி வைத்துக்கொண்டு இந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி ஷாரோனை தனது வீட்டிற்கு அழைத்து விஷம் கலந்த கசாயம் ஒன்றை குடிக்க செய்துள்ளார் ஷாரோனும் காதலி வழங்கிய கசாயத்தை நம்பிக்கையுடன் வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் அவர் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 11 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஷாரோன் அக்டோபர் 25 ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் தனது காதலி தனக்கு விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றது ஷாரோனுக்கு தெரிந்தும் அதனை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார் சாரோன் அதே நேரத்தில் தனது நண்பர் மற்றும் தந்தையிடம் மட்டும் கூறி உள்ளார் இதனையடுத்து ஷாரோனின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஷாரோனுக்கு க்ரீஷ்மா விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவர போலீசார் க்ரீஷ்மா மற்றும் அவருக்கு கொலை செய்ய உதவிய தாயார் சிந்து மற்றும் தாய்மாமன் நிர்மல்குமாரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர் இதனையடுத்து மூன்று பேரையும் போலீசார் சிறையில் அடைத்து வழக்கு நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது இதனையடுத்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி க்ரீஷ்மாவிற்கு எதிராக அதிக ஆதாரங்களை திரட்டிய நிலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர் இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி பொது மருத்துவ தலைமை மருத்துவர் அருண் சாரோன் உடலில் இறக்கும் போது இருந்த விஷமும் க்ரீஷ்மா தனது லேப்டாப்பில் இணையத்தில் தேடிய விஷமும் ஒன்று என்று இந்த விஷத்திற்கு மாற்று மருந்து இல்லை என்றும் இந்த விஷம் மனித உடலில் 15 மில்லி செலுத்தினாலே போதும் மரணம் உறுதி என்பதை தெரிந்து கொண்டுதான் க்ரீஷ்மா இந்த விஷத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் சாட்சியம் தெரிவித்து அதிர்ச்சியூட்டினார் மேலும் வழக்கு விசாரணையில் ஆஜரான திற்பரப்பு தங்கும் விடுதி மேலாளரும் க்ரீஷ்மாவை அடையாளம் கண்டு கூறி உள்ளார் இதனையடுத்து நீதிபதி அடுத்தடுத்த சாட்சிகளை விசாரித்து தற்போது விசாரணை முடிவுக்கு வந்துள்ளது கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் காதலி க்ரீஷ்மாவுக்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் கிடைக்கப்பெற்றதால் இந்த வழக்கிற்க்கான வெளியாக உள்ளது
-ப.மனோகரன்
Leave a Reply