Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சாயப்பட்டறை கழிவுகளால்… பாழாய்போன நீர்நிலைகள்… கரூர் பயங்கரம்!

சாயப்பட்டறை கழிவுகளால்…
பாழாய்போன நீர்நிலைகள்…
கரூர் பயங்கரம்!

சாயப்பட்டறை கழிவுகள் என்பது , சாயத் தொழில்துறையில் உற்பத்தியாகும் கழிவுகளைக் குறிக்கும் .

சாயப்பட்டறை கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதால்  நீர் மாசுபாடு ஏற்படுகிறது , இதனால்
விவசாயம் , நிலம் பாதிக்கப்படுகிறது .  
சாயப்பட்டறை கழிவுகளால் ஏற்படும் நுரைகள் , சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது .

கரூர் அருகே சாயப்பட்டறை கழிவுகள் இரவு நேரங்களில் பாசன வாய்க்கால் , ஆறுகளில் கலக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்

கரூர் மாவட்டம்  செட்டிபாளையம் கிராமத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது .
இந்த தடுப்பணைப் பகுதியில் இருந்து பிரியும்  ராஜவாய்க்கால்  மணவாசி வரை செல்கிறது  , சுமார் 35 கி.மீ தூரம் பாயும் இந்த ராஜ வாய்க்கால் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது , இவ்வாய்க்கால் செல்லும் கிராமங்களில் சுமார் 20 க்கும் மேற்பட்ட தனியார் சாயப்பட்டறைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் இரவு நேரங்களில் இந்த பாசன வாய்க்கால்களில் கழிவு நீரை திறந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது .

இது தொடர்பாக  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் .

சாயப்பட்டறை கழிவுநீர் பாசன வாய்க்காலில் செல்வதால் வாய்க்கால் நீரை நேரடியாக நெல் பயிருக்கு பாய்ச்சுவதால் நெல் பயிர்கள் வளர்ச்சியடையாமல் காய்ந்து விடுகிறது என்றும் , பாசன கிணற்றில் கலந்ததால் அந்த தண்ணீர் கெட்டுப் போய் விடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் .

கரூர் அமராவதி  துணை வாய்க்கால் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தென்னை , கரும்பு , நெல்  ஆகிய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர் . இப்பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்தன .
ஆனால் தற்போது முறையாக ஆர்ஓ சிஸ்டம் மூலமே சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன ,
ஆனால் இப்போது கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு அனுமதி பெறாமல் சாயபட்டறைகள் இல்லை , இருப்பினும் இப்பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் , பாட்டில்கள் குவிக்கப்பட்டு மாசுபட்ட வாய்க்காலா அல்லது பாசன வாய்க்காலா என்று பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கும் சந்தேகம் ஏற்படும் நிலையில் அமைந்துள்ளது  .

சாயக்கழிவு கலந்த தண்ணீர் ,
கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் அமராவதியில் கலந்து  பின்பு காவிரியாற்றில் கலக்கிறது .
20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக , காவிரியாறு நீர்தான் உள்ளது .
இந்நிலையில் நொய்யல்  ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால் , டெல்டா மாவட்ட விவசாயமும் பாதிக்கப்படுகிறது . இதுமட்டுமின்றி சென்னை மாவட்ட தேவைக்கும் , வீராணம் ஏரி மூலம் காவிரி நீர் செல்கிறது .
நொய்யல் , அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதை தடுக்கவில்லை எனில் விவசாயமும் , குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் ( பட்டுள்ளது )

இது ஏதோ கரூர் மாவட்டத்தில் மட்டும் உள்ள சாயபட்டறை களின் பங்கு மட்டுமல்ல  ,  திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் இயங்கும் சாயப்பட்டறைகளின் பங்கும் அதிகம் .

இதில் மிகவும் வருத்தமான விசயம் என்னவெனில்
கருர்  திருப்பூர்  ஈரோட்டில்  ஏற்றுமதி அதிகமென்றால்  நமது நிலத்தின் நாசமும்  அதிகம் ,
ஏற்றுமதி அதிகம் என சந்தோசப்படுவதா  ?
நிலம்   நீர்  நாசம் என வருத்தப்படுவதா  ?

இப்போது சாயபட்டறைகளுடன் கொசு வலை நிறுவனங்களும்  நிலத்தை நாசம் செய்யும் வேலையில் கைகோர்த்துள்ளனர்  அதுவும் நவீன முறையில் ,
இரசாயன கழிவுகளை நீர் நிலைகளில் கலப்பது பழையதாகிவிட்டது இப்போது  சில நிறுவனங்கள் இரசாயன நீரை நேரடியாக ஆழ்துளைகள் மூலம் நிலத்தில் செலுத்துகின்றன்

இதனால்  இப்போது நிலத்தடி நீர் மாசடைந்து  , சரும பிரச்சனைகள் மற்றும் இதர பிரச்சினைகள் ஏற்பட்டு நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது .

மக்கள் பிரதிநிதிகளான
வார்டு உறுப்பினர் முதல்  மேயர் , விலிகி , விறி வரை என்ன செய்துகொண்டிருக்கின்றனர்  என்று தெரியவில்லை . மக்களின் வாழ்வாதரத்தை  , உடல் நலத்தை , விவசாயத்தை  பாதிக்கும் இந்த செயலை கண்டுகொள்ளாமல் இருப்பது  ஏனோ  ?

தடுக்க வேண்டிய அதிகாரிகள் சில இடத்தில் மட்டும் தங்கள் கடமையை செய்துவிட்டு , சில இடங்களில் தங்களுக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டு அமைதி காக்கின்றனர் என பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை நம்மிடம் தெரிவித்தனர்.

– சு.மதி