இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்திக்கு சமீபகாலமாக தொடர் சறுக்கல்கள்… காந்தி எடுக்கும் எல்லா முடிவுகளும் அவருக்கு எதிராகவே முடிந்திருக்கிறது. மகன் வினோத்காந்திக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவிக்கு ஆசைப்பட்டார். அதை ஆற்காடு திமுக எம்எல்ஏ ஈஸ்வரப்பன் தட்டி பறித்துவிட்டார். அரக்கோணம் எம்பி சீட்டுக்கு முயற்சி செய்தார். மாவட்ட பொருளாளர் தொழிலதிபர் ஏ.வி.சாரதி தனக்கு கேட்டு தீவிரமாக முயற்சிசெய்தார். கடைசியில் ஜெகத்ரட்சகனுக்கு எம்பி சீட் கிடைத்துவிட்டது. கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர் காந்தி, ஏ.வி.சாரதியால் தனக்கு மட்டுமல்ல தன் மகன் வினோத் காந்திக்கும் அரசியல் நெருக்கடி உண்டாக்கும் என்பதை கணித்தவர், ஏ.வி.சாரதியை இனிமே கட்சி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெயர் போட்டு படம் போட்டு கூப்பிடாதீங்க என்று திமுக நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டார். அதனால் கொஞ்ச காலம் அமைதியாக இருந்த ஏ.வி.சாரதி வழக்கம்போல எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தார். கட்சிக்காரர்களும் சாரதியோடு கைகுலுக்க ஆரம்பித்தனர்.
கடந்த பொங்கலுக்கு முன்பு மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி சோளிங்கர் ஒன்றிய செயலாளர் சந்திரன் சீட்டிங் கேஸ்ல சிக்கிக்கொண்ட தன்னுடைய ஆதரவாளர் வேதாசீனிவாசன் உள்ளிட்ட மூவரையும் திமுகவிலிருந்து நீக்கச்சொல்லி தலைமையிடம் முறையிட்டார் அமைச்சர் காந்தி. உடன் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பனையும் அழைத்துக்கொண்டு போனார். விஷயம் தெரிந்து ஜெகத்ரட்சகன் எம்பி அமைச்சர் காந்தி ஆசைக்கு முட்டுகட்டை போட தலைமையில் காந்திகோரிக்கை நிறைவேற்ற முடியாது என்று கைவிரித்துவிட்டனர்.
ஏ.வி.சாரதி அமைச்சர் காந்திக்கு மட்டுமல்ல ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பனுக்கும் சிம்மசொப்பனமாக இருக்கிறார். ஆற்காடு தொகுதியை குறிவைப்பதால் சாரதி மீது ஈஸ்வரப்பனுக்கு கோபம். வேதாசீனிவாசன் தன் நிழலில் இருந்துகொண்டு சீட்டிங் வேலைகள் செய்வதால் காந்திக்கு கோபம். சோளிங்கர் ஒன்றிய செயலாளர் சந்திரனுக்கும் கரடிகுப்பம் வெங்கடேசனுக்கும் கான்ட்ராக்ட் வேலைகளை பிரிக்கும் விஷயத்தில் ஒத்துப்போக. அதை அப்படியே அமைச்சர் காந்தி காதில் போட, நீக்கும் பட்டியலில் சந்திரன் பெயரையும் சேர்த்துவிட்டார். நிர்வாகிகளை நீக்க வேண்டும் என்கிற பட்டியலில் ஏ.வி.சாரதி பெயர் இருக்க ஜெகத்ரட்சகன் எம்பி டென்ஷனாகி அதெல்லாம் வேண்டாம் என்று தடுப்புசுவர் எழுப்பிவிட்டார். அவர் மட்டுமல்ல பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனும் தன் பங்குக்கு தடுப்புசுவரை எழுப்பியிருக்கிறார்.
இராணிப்பேட்டை மாவட்டம் முதற்கொண்டு அறிவாலயம் வரை தெரியும்போது அமைச்சர் காந்திக்கு மட்டும் ஏ.வி.சாரதியின் தொடர்புகள் தெரியாமலா இருக்கும்? தன்னுடைய தொடர்புகளை மாப்பிள்ளை சபரீசன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்வரை வளர்த்து வைத்திருக்கும் ஏ.வி.சாரதியை அமைச்சர் காந்தியால் அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது என்கின்றனர் இராணிப்பேட்டை மாவட்ட திமுகவினர். அப்படியா…!
– ஆலவாயர்
Leave a Reply