Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சின்னவர்னு கூப்பிடுங்க,ஆம்பூர் ஆக்டிங் எம்எல்ஏ…அசோக்குமார் அக்கப்போர்?

கொடி கம்பத்தை உடைச்சிட்டு சாதி பாசத்தில வைகோ பின்னாடி மதிமுகவுக்கு போன வில்வநாதன் 1996ல் மீண்டும் வந்து ஊராட்சி மன்ற தலைவரானார். பேர்னாம்பட்டு ஆசிரியர் கோவிந்தனுக்கு எடுபிடி வேலைகள் செய்து ஒன்றிய செயலாளர் பதவியை பிடித்தார். அப்படியே இராணிப்பேட்டை காந்திகிட்ட ஒட்டிகிட்டார் அதன்பிறகு 2011ல் மனைவி பத்மாவதியை யூனியன் சேர்மன் ஆக்கினார். இந்த நிலையில் மாவட்டம் பிரிந்து திருப்பத்தூர் மாவட்டம் உதயமானது. 2016ல் ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணிக்கு ஆர்வமாக தேர்தல் வேலை செய்ய, விஷயம் தெரிந்து திமுக தலைமை நடவடிக்கை எடுக்க தயாராக, இராணிப்பேட்டை காந்தியை வைத்து தடுத்துவிட்டார்.

டிடிவி தினகரன் பக்கம் போனதால் ஆம்பூர் பாலசுப்பிரமணி எம்எல்ஏ பதவி இழக்க, இடைத்தேர்தலில் நாயுடு நின்ற தொகுதியில் நாயுடுவுக்கே சீட் தரணும் என்று வில்வநாதன் சவுண்டு விட, பின்னணியில் இராணிப்பேட்டை காந்தியும், அணைக்கட்டு நந்தகுமாரும் பலமாக நின்று ஆதரித்தனர். அதில நந்தகுமார் சின்னதா ஒப்பந்தம் போட்டுக்கொண்டார் இந்தமுறை நீ அடுத்தமுறை எனக்கு விட்டுத்தரணும் என்பதுதான்! பதவிக்காலம் முடிந்து மீண்டும் வந்த சட்டமன்ற தேர்தலில் வேட்டியை மடிச்சிகட்டிகிட்டு வில்வநாதன் தயாராகிட்டார் வெளியூர், பக்கத்து மாவட்ட வேட்பாளர் ஆம்பூருக்கு வரக்கூடாது மண்ணின் மைந்தருக்குதான் வாய்ப்பு தரவேண்டும் என்று கோஷம் போட ஆரம்பித்தார். பக்கபலமாக பொதுச் செயலாளர் துரைமுருகனும் தொழிலதிபர் பரிதாபாபுவும் இருந்தனர் 2021ல் மீண்டும் ஆம்பூர் தொகுதிக்கு எம்எல்ஏ சீட் வென்றவுடன், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவுடன் ஐக்கியமாகிவிட்டார் சாதி பாசத்திற்காக எ.வ.வேலுவையும் மொழி பாசத்திற்காக கே.என்.நேருவையும் நெருக்கமாக்கிக்கொண்டார். இவர்கள் இருவர் பக்க பலத்தில் ஆம்பூர் தொகுதியில் உள்ள திமுகவினரை ஒருவழி பண்ணிவிட்டார் வில்வநாதன்.

அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் மாதனூர் யூனியனில் மச்சான் சீனிவாசன் மனைவி சாந்தியை துணை சேர்மன் ஆக்கியதோடு, அப்படியே மாவட்ட துணை செயலாளராகவும் ஆக்கிவிட்டார். மச்சான் சீனுவாசனை பத்து ஊராட்சிக்கு ஒன்றிய செயலாளர் ஆக்கிவிட்டார் இவ்வளவுக்கும் உள்ளே வெளியே உறவுதான் இவர்களுடையது சண்டை போட்டுகிட்ட மாதிரி காட்டிக்குவாங்க அது திமுகவினரை ஏமாற்ற.. வில்வநாதனின் இவ்வளவு வேலைகளையும் பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்த மகன் அசோக்குமார் அப்பாவிடமிருந்த எம்எல்ஏ பவரை பிடுங்கிகிட்டு, கையெழுத்து போட மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தார் ஆம்பூர் தொகுதியில் எல்லாம் அசோக்குமார் மயமானது. காவல்நிலையம், வருவாய்த்துறை, நகராட்சி, யூனியன், பத்திர பதிவு அலுவலகம் மணல் டெண்டர் இதர கனிம வள கொள்ளை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி அனைத்தும் ஆக்டிங் எம்எல்ஏ அசோக்குமார் கட்டுப்பாட்டில் யாராக இருந்தாலும் நேரடி டீலிங்தான் சட்டப்பூர்வமான விஷயமா இருந்தாலும் சட்டத்துக்கு புறம்பான விஷயமா இருந்தாலும் அசோக்குமாரைத்தான் தொடர்புகொள்ள வேண்டும். ஆம்பூர் தொகுதியில் உள்ள திமுகவினர் பொதுமக்கள் அனைவரும் தன்னை சின்னவர் என்று அழைக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறார் ஆக்டிங் எம்எல்ஏ அசோக்குமார்.

திமுக நிர்வாகிகளை தன்னுடன் நெருங்கவிடுவதில்லையே தவிர, பாஜகவில் உள்ள தன் சமுதாயத்து உறவுகளோடு நெருக்கம் பாராட்டுகிறார்.

தன்னை எதிர்த்து வளர்ந்த அகரம்சேரி சண்முகம் மகன் சுரேஷ்குமாரை (இவர் மாதனூர் யூனியன் சேர்மனாக இருக்கிறார்) திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவிடம் தப்பு தப்பா போட்டு கொடுத்து ஐந்து ஊராட்சிக்கு ஒன்றிய செயலாளராக்கிவிட்டனர். சுருக்கமா சொல்லனும்னா டம்மி பண்ணிட்டாங்க அடுத்தமுறை எம்எல்ஏ சீட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்தவர், சம்பாத்தியத்தை விலவநாதனோ, ஆக்டிங் எம்எல்ஏ அசோக்குமாரோ வீணடிக்கவில்லை ஆம்பூர் தொகுதிக்குள் நிலங்கள் ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பிளாட் போட்டாலும் முதல் ஆளா ஆஜராகி இரண்டு பிளாட் வாங்கிடறார் இதுபோக சென்னை பெங்களூரில் சொத்துக்கள் ஏராளமாய் முளைத்திருக்கிறது. தன் மகனை ஒன்றிய செயலாளர் பதவியில் உட்கார வைத்துவிட்டு, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் போடப்போறாங்க அதில புதியதாக உருவாகும் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆகிடனும் என்பது வில்வநாதனின் ஆசை! அதற்குண்டான வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மறந்துபோச்சி, தொகுதியில எம்எல்ஏ அலுவலகம் இல்ல, புதிய நலத்திட்டங்கள் எதுவும் கொண்டுவரல, வெறுப்பின் உச்சத்தில் திமுகவினர் இருக்க அடுத்த முறையும் எனக்குதான் எம்எல்ஏ சீட்டுனு நகர்வலம் வரும் வில்வநாதன் தொகுதிக்குள் தனியாக நடந்து போகமுடியாது இதுதான் அவருடைய ஒரிஜினல் செல்வாக்கு, மாப்பிள்ளை சபரீசனின் நெருங்கிய நண்பர் தொழிலதிபர் ஆர்.டி.சரவணன், மாதனூர் யூனியன் சேர்மன் சுரேஷ்குமார், நகரமன்ற தலைவர் ஏஜாஸ்அகமது உள்ளிட்டவர்கள் எம்எல்ஏ சீட் எனக்குதான் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

அடுத்த முறையாவது ஆம்பூர் தொகுதிக்கு நல்ல எம்எல்ஏ வாய்க்கட்டும்.

– ஆலவாயர்