மூன்று தீபாவளியை கொண்டாடி தீர்த்திருக்கின்றனர் தருமபுரி மாவட்ட திமுகவினர் அட ஆச்சரியமா இருக்கே! ஆமாங்க திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களை கடந்துவிட்டது. தருமபுர மாவட்ட திமுகவில் ஓயாத அதிருப்தி அலை! காரணம் மாவட்ட நிர்வாகிகளின் சுயநல அரசியல்வாதிதான். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதியிலும் வெற்றிவாய்ப்பை அதிமுக கூட்டணியிடம் கொடுத்துவிட்டது. பின்னணியில் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகனின் வைட்டமின் ‘ப’ விளையாட்டில் பல திமுக நிர்வாகிகள் கைநீட்டி சொந்த கட்சிக்கு சூனியம் வைத்த விஷயம் வெளியாகி அறிவாலயமே அதிர்ச்சி அடைந்தது தனி கதை!
எம்.பி.யாக இருந்த டாக்டர் செந்தில்குமார் ஒரே மக்கள் பிரதிநிதி மாயாவி மாதிரி யார் கண்ணிலும் படமாட்டார் குறிப்பா திமுகவினர் பார்வையில் படவேமாட்டார் பாராளுமன்றத்திலும் தருமபுரியிலும் டாக்டர் செந்தில்குமாரின் பேச்சும் செயல்பாடுகளும் சர்ச்சைக்கு உள்ளாகும்போது அறிவாலய தலைமை சங்கடங்களை சந்திக்கும் அப்பொழுது டாக்டர் செந்தில்குமார் பேசப்படுவார் இப்படியே தன் பதவி காலத்தை முடிச்சிட்டு கிளம்பிட்டார்.
புதிய எம்பி ஆ.மணி வழக்கறிஞர் இவருடைய வெற்றிக்கு உழைத்த திமுகவினரை விரல்விட்டு எண்ணிவிடலாம் ஆ.மணி ஜெயிக்கக்கூடாது என்று யாகம் நடத்திய திமுக நிர்வாகிளே அதிகம்! திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை, தாராள கவனிப்பு, இதனால ஆ.மணி பாஸ் பண்ணிவிட்டார். ஜெயித்த பிறகு ஆ.மணியுடன் பெரும்பான்மை திமுகவினர் கை குலுக்கி கொண்டனர். எட்டு கோடி கடனிருக்கு அசலை கட்டணும், அதுவரை வட்டி கட்டணும் ஆனா ஆ.மணி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மாதிரியே எப்பும் சிரிச்சுகிட்டே இருக்கிறார் இந்த சிரிப்பு யாருக்கோ… எதற்கோ…? என்று ஒரு பகுதி திமுகவினர் மிரளுகின்றனர். பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் எ.வ.வேலு, உதவியாளர் தேவ்ஆனந்த் உள்ளிட்ட அதிகார மையங்கள் ஆதரவு இருப்பதால் ஆ.மணியின் தைரிய அரசியலுக்கு பஞ்சமில்லை. போன் பண்ணா எடுக்கிறார். எந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும் வருகிறார். கடிதம் கேட்டால் தருகிறார். ஊரில் இருந்தா பார்க்கலாம் பேசலாம் பழகலாம் இதுதான் ஆ.மணியின் லேட்டஸ்ட் நிலவரம்.
சமீபத்தில் நடந்த மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வர்ற சட்டமன்ற தேர்தலில் ஐந்து தொகுதிகளையும் ஜெயிக்கணும் நிர்வாகிகள் தொண்டர்களை அரவணைச்சி போங்க, யாரையும் ஒதுக்காதீங்க என்ன உதவி வேண்டும் சொல்லுங்க செய்யறேன்னு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அட ஆச்சரியமா இருக்கே!
தீபாவளியை கொண்டாட அறிவாலயம் கவனிப்பு ஒரு பக்கம், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ஆ.மணி மூன்று தரப்பு கவனிப்பு நடந்து முடிந்திருக்கிறது. திமுக நிர்வாகிகளும் மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பதாக சொல்லுகின்றனர். உண்மையாக இருந்தால் மகிழ்ச்சிதான்!
– ஆலவாயர்
Leave a Reply