அலங்காநல்லூர்-
அதிமுகவுக்கு, மீண்டும்,
மக்கள் வாய்ப்பு கொடுப்பார்கள்…
மாஜி ஆர்.பி.உதயகுமார்
சமூக நீதி,தமிழ் மொழி,தமிழ் இன உரிமைக்காக நடத்திய இயக்கத்தை, இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் உரிமைக்காக கட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின் .
யாரோ எழுதி கொடுத்ததை வைத்து அப்பா என்று அழைக்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறலாமா? அது தப்பாக நினைப்பாகத் தான் உள்ளது.
ஆண்டவனே ஸ்டாலின் அரசு மீது கோபமாக உள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சித்தார்.
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில், புரட்சித்தலைவி அம்மாவின் 77 வது பிறந்தநாள்
கூட்டம் குமாரத்தில் நடைபெற்றது .
இதற்கு, ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை
தாங்கினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாக இருந்து மாடு முட்டி பலியான பெரியசாமி குடும்பத்திற்கு நிவாரண உதவியும் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்
தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரை
யாற்றினார் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன், தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மாணிக்கம், சதன் பிரபாகரன், கருப்பையா,மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், அன்னபூர்ணா தங்கராஜ், ராமகிருஷ்ணன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், அன்பழகன், மாவட்ட கழக நிர்வாகிகள் வக்கீல் திருப்பதி, பஞ்சவர்ணம், மாவட்ட அணி நிர்வாகிகள் லட்சுமி, மகேந்திர பாண்டி, சிவசக்தி, பொதுக்குழு உறுப்பினர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
புரட்சித்தலைவி அம்மாவின் புகழை எடுத்துச் செல்லும் வகையில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழகம் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் அம்மாவின் பிறந்த நாள் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அம்மாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பாரத பிரதமர் வெளிநாட்டில் இருந்தாலும் அம்மாவை பாராட்டி பேசி உள்ளார். அதேபோல, மத்திய அமைச்சர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அம்மாவை வாழ்த்துகிறார்கள். அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்துகிறார்கள். ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த முதலமைச்சருக்கு பிறந்தநாள்
விழா என்றால் ,
பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட வாழ்த்து சொல்ல வர மாட்டார்கள்.
52 ஆண்டுகள் கழகம் மக்களுக்கு சேவை செய்தது ,இதில் 32 ஆண்டுகள் கழகம் ஆளுங்கட்சியாக திகழ்ந்து மக்களுக்கு சேவையாற்றியது திராவிட இயக்கத்தை கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் அண்ணா தொடங்கி ,
காங்கிரசை வீழ்த்தினார். குறிப்பாக, மகளிர்காகவும், தமிழ் மொழிக்காகவும் ,தமிழின உரிமைக்காகவும், அண்ணா கட்சியை தொடங்கினார் .
ஆனால் ,
இன்றைக்கு ஸ்டாலின் யார் உரிமைக்காக கட்சியை நடத்தி வருகிறார்? தனது மகன் உதயநிதி உரிமைக்காகவும், அன்பு நிதி உரிமைக்காகவும்,துர்கா ஸ்டாலின் உரிமைக்காகவும் நடத்தி வருகிறார். இன்றைக்கு எல்லோருக்கும் வாய் பூட்டு சட்டத்தைப் போட்டது போல திமுக செயல் பட்டு வருகிறது.
எடப்பாடியார் ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறிவிட்டது .இதனால், மக்கள் திமுக மீது கடு கோபத்தில் உள்ளார்கள் . ஆனால், முதலமைச்சர் போட்டோ சூட் மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறார், டிவியை திறந்தால் இவரும்,இவரது மகன்தான் வருகிறார்கள்.
அதே போன்று
தன்னை அப்பா என்று அழைக்கிறார் என்று புது கண்டுபிடிப்பு போல கூறுகிறார். பிறக்கும் ஒவ்வொரு உயிரும் மனிதன் மட்டுமல்ல, அது விலங்குகளும் அம்மா என்று தான் அழைக்கும், அம்மா என்பது ஒரு பொதுவான சொல், புரட்சித்தலைவி அம்மா உலகத் தமிழயினமக்கள் என்னை அம்மா என்று அழைப்பது போதும் எனக்கு எதுவும் தேவையில்லை என்று கூறினார்.
ஆனால் ,ஸ்டாலின் தன்னை அப்பா என்று அழைக்கிறார்கள் என்று கூறுகிறார் இவருக்கு யார் எழுதிக் கொடுத்துள்ளனர் மூளை இல்லாமல் பேசி வருகிறார் .
பொதுவாக தாத்தா, மாமா என்று தான் கூறுவார்கள் ஆனால் அப்பா என்று சொன்னால் தப்பாக நினைக்க மாட்டார்களா? முதலமைச்சருக்கு யோசனை வேண்டாமா? இன்றைக்கு மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார் .
பருப்பு முதல் சமையல் பொருட்கள் விலை உயர்த்தி விட்டார்கள், காய்கறிகளை உயர்த்து விட்டார்கள் எதற்காக உங்களை அப்பா என்று கூப்பிட வேண்டும்?
புரட்சித்தலைவி அம்மா 2021 ஆண்டில் மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார் அப்பொழுது 9லட்சம் மாணவர்களுக்கு வழங்குகின்ற நிலை இருந்த பொழுது, அதை மாற்றாக டேப்லெட் கொண்டு வரலாம் என்று அதிகாரிகள் கூறிய போது நான் மாணவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டேன் ஒரு கோடி விற்றால் கூட அதை நான் வாங்கி தருவேன் என்று 52 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினியை அம்மா வழங்கினார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் கூறினார் ,99 சகவீதம் நிறைவேற்றதாக கூறினார் ஆனால் 10 சகவீதம் கூட நிறைவேற்றவில்லை.நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள் வீட்டுக்கு போன பின்பு தான் அந்த ரகசியத்தை கூறுவார்களா?
அதேபோல ,
கல்வி கடனை ரத்து செய்யவில்லை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என்று கூறினார்கள், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று கூறினார்கள், அதேபோன்று மூணரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்புவோம் என்று கூறினார்கள் எதையும் செய்யவில்லை.
எடப்பாடியார் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினார் எந்த மாநிலத்திலும் இது போன்று வழங்கவில்லை, கடந்த சட்டமன்ற கூட்டத்தில் ஏன் பொங்கல் பரிசு வழங்கவில்லை என்று கேள்வி கேட்டால் தேர்தல் வந்தால் தருவோம் என்று கூறுகிறார்கள்.
கொரோன காலத்தில் கூட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தடையில்லாமல் நடத்தி அதற்காக நிதியை ஒதுக்கீடு செய்தவர் எடப்பாடியார்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் மறுபடிவமாக எடப்பாடியார் உள்ளார் என, 8 கோடி மக்களும் கூறுகிறார்கள்.
ஆனால், இது சொல்லும் போது சிலருக்கு வயிறு எரிகிறது.
புரட்சித்தலைவி அம்மா 69 சகவீத இட ஒதுக்கீட்டினை கொண்டு வந்து ஒன்பது அட்டவணையில் இடம் பெறச் செய்தார்,அதுபோல
எடப்பாடியார் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் 7.5 சகவீத இட ஒதுக்கீட்டைகொண்டு வந்து சமூக நீதியை படைத்தார் ,
புரட்சித்தலைவி அம்மா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தார், அதேபோல எடப்பாடியார் குடிமராத்து திட்டத்தை கொண்டு வந்தார்.
இன்றைக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கூட இந்த அரசு வழங்கவில்லை நிச்சயம் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் அப்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முழுமையாக மக்களுக்கு வழங்கப்படும் அம்மாவின் திட்டங்கள் எல்லாம் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது நிச்சயம் அந்த திட்டங்கள் எல்லாம் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் வழங்கப்படும் .
இன்றைக்கு அரசு ஊழியர்கள் சாபம் ஸ்டாலின் திமுக அரசை விட்டு வைக்காது. அதேபோன்று, விவசாயிகள் ஸ்டாலின் அரசின் கடும் கோபத்தில் உள்ளனர். இன்றைக்கு, ஆண்டவனே ஸ்டாலின் அரசு மீது கோபமாக உள்ளார்கள்.
நிச்சயம் எடப்பாடியார் 2026 தேர்தலில் எடப்பாடியார் கோட்டைக்கு போவார் ,ஸ்டாலின் வீட்டுக்கு போவார் என, கூறினார்
– நா.ரவிச்சந்திரன்