சத்தியமங்கலம்
பஸ் நிலையத்தை சுற்றி டாஸ்மாக் கடைகள்…
பீதியில் பொதுமக்கள் ?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர பகுதிக்குள் மட்டும் 6 அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது.இது தவிர திலி3 பார்கள் 2-ம் மற்றும் திலி2 பார் எனப்படும் மனமகிழ் மன்றங்கள் 2 என சுமார் 10 மதுபான கூடங்கள் இங்கு இயங்கி வருகிறது.
ஊட்டி,மைசூர்,ஆசனூர்,பண்ணாரி போன்ற பல சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வெளியூர் பயணிகளின் பாதையில் சத்தியமங்கலம் ஜங்ஷனாக இருப்பதால் நிறைய வெளியூர் மற்றும் வெளி மாநில பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.டூர் செல்லும் இளைஞர்கள் பயணத்தின் இடையே இங்கு நிறுத்தி மதுபானம் அருந்தி விட்டு மலைப்பதையில் வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.இதனால் அவர்கள் விபத்துக்குள்ளாவதோடு,சரியாக வரும் வாகனங்களையும் விபத்துக்குள்ளாக்கி விடுகின்றனர்.
பொதுவாக,பேருந்து நிலையம்,அரசு அலுவலகம்,ஹாஸ்பிடல் அருகில் மதுபான கடைகள் இயங்க கூடாது என்ற விதிமுறை சத்தியமங்கலதிற்கு மட்டும் பொருந்ததோ? என்று என்னுமளவுக்கு இங்கு மதுபான கடைகளும்,கூடங்களும் நிறைந்துள்ளது .பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே 3 அரசு மதுபான கடைகளும்,2 தனியார் மதுபான கூடங்களும் இயங்கி வந்த வேளையில் பேருந்து நிலைய காம்பவுண்டினை ஒட்டியே மேலும் ஒரு தனியார் மதுபான கூடம் துவக்கப்பட்டு 24 மணி நேரமும் விற்பனை நடைபெற்று நடைபெற்று வருகிறது.பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறை தினங்களான ஜனவரி 15 ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய நாட்களில் கூட காலை 7 மணி முதலே விற்பனை ஜோராக நடை பெற்று வந்தது.
காலையிலும், மாலையில் பள்ளி,கல்லூரி,வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவரும் பேருந்து நிலையத்திற்கு வருவதென்றால் இந்த கடைகளை தாண்டி செல்லும் நிலையே உள்ளது,பேருந்து நிலையம் செல்லும் வழியிலேயே சாராய போதையில் நடை போடும் குடி மகன்கள் மத்தியில் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலையே உள்ளது.
அரசு இத்தனை கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு செய்யும் இடைஞ்சல்களுக்கு இடையே கடமை தவறாத சத்தியமங்கலம் போக்குவரத்து காவல்துறையோ குடிமகன்களை விரட்டி விரட்டி பிடித்து தங்களின் கணக்கை சரி செய்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற்று வருகின்றனர்.குடி போதையில் வாகனம் ஓட்டுபவரை பிடிப்பது நல்லது தானே என நாம் நினைத்தால் “சில்லிங்” எனப்படும் கள்ள மார்க்கெட்டில் 24 மணிநேரமும் மதுபானம் தங்கு தடை இன்றி கிடைக்கும் இடமாக சத்தியமங்கலம் இருக்கிறது.அதிலும் மனமகிழ் மன்றங்களிலும்,அரசு மதுபான கடைகளிலும் இரவு 1 மணி வரையிலும் இந்த விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
ஊருக்கு வெளியே இருக்கும் கடைகளில் குடித்து விட்டு மலைப்பாதை,வெளியூர் பயணம்,மற்றும் அத்தாணி சாலையில் செல்பவர்களுக்கு போக்குவரத்து போலீசாரால் எந்த தடையும் இருப்பதில்லை.
6 கடைகள் ஊருக்குளேயே இருப்பதால் ஊருக்குள் வர இருக்கும் ஒரே வழியான சத்தியமங்கலம் பாலத்தில் நின்றே தங்களது மந்திலி டார்கெட்டை அவர்கள் அடைந்து விடுகின்றனர். இத்தனை கடைகளை ஊருக்குள் அரசே வைத்து விட்டு போலீசாரையும் கடைக்கு அருகில் நிற்க வைத்து பிடித்து ரூ.10000 வரை பைன் போடுவது நியாயமா? என்று குடிமகன்கள் கதறுகின்றனர்.போலிசாரின் இந்த நடவடிக்கையால் தினக்கூலி போன்ற நபர்கள் தான் பிடிக்கப்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
சத்தியமங்கலம் போன்ற சிறிய நகராட்சிக்கு தமிழக அரசு இத்தனை கடைகளை எப்படி அனுமதித்தது?
அதுவும் நகரின் மத்தியில் பேருந்து நிலையத்தை ஓட்டி இத்தனை மதுபான கடைகள் எப்படி இயங்கலாம்?
போன்ற கேள்விகளுடன் இப்பகுதி மக்கள் இது சத்தியமங்கலமா ? இல்லை சரக்கு மங்கலமா?என நினைக்கும் நிலையே இங்கு உள்ளது.
கள்ள மார்க்கெட்டில் 24 மணி நேரமும் கிடைக்கும் மதுபானத்தை தடை செய்ய வேண்டும்,ஊருக்குளேயே இருக்கும் 3 அரசு மதுபான கடைகளையும்,மனமகிழ் மன்றத்தினையும் ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்பதே சத்தியமங்கலத்தை சேர்ந்த பெண்கள்,மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுங்காரா அரசு டாஸ்மாக் அதிகாரிகளும்,ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் இதில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.
துறை அமைச்சர் செந்தில்பாலாஜியோ,மாவட்ட டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளோ துரித நடவடிகை எடுத்து இந்த மதுபான கூடங்களை இடம் பெயர்த்து பெண்கள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தினை போக்கிட வேண்டும் என்பதே நமது விருப்பம்.
– தகடூர் தம்பி