தமிழகத்தில் ஜெயலலிதா இருந்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. பின்னர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலின் போது நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.தொடர்ந்து நடத்தப்படாத விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் 2021 ஆம் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் தெதாலை நடத்த தீவிரமாக ஈடுபட்டுவந்தது.
இதற்கிடையில் பருவமழை, ஓமெக்ரான் என தொடர் தடைகள். மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து இப்போது எந்த ஆர்வமும் இல்லை .அத்துடன் கட்சிகளும் பொறுமை இழந்து விட்டன.
இதனிடையே, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பொதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே வெள்ளத்திற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தவிர புதிதாக பரவ தொடங்கி இருக்கும் ஒமிக்ரான் வைரஸ் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நகராட்சி தேர்தலை இந்த சமயத்தில் வைத்தால் சரியாக இருக்காது என அமைச்சர்கள் பி, திமுக முன்னணி தலைவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போகலாம் என செய்தி பரவியது இதன் காரணமாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த மழை, கொரோனா இவற்றை மக்கள் மத்தியில் ஊதி பெரிதாக்கி எப்படியாவது கணிசமான சீட்டுகளை பிடித்துவிடுவோம் என கனவு கண்டனர். ஆனால் அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டது திமுக அரசு. ஏனென்றால் உளவுத்துறை அளித்த அறிக்கையில் அரசுக்கு பாதகமான அம்சங்கள் இருக்கும் என சுட்டிக் காட்டப்பட்டது. இதனால் சுதாரித்துக்கொண்ட ஆளும்கட்சி தலைமை அப்படியே தேர்தல் அறிவிப்பை கிடப்பில் போட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுதும் மக்களிடம் சென்று நல்ல பெயர் எடுக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி அனைத்து அமைச்சர்களும் தமது தொகுதியில் அதிருப்தி இல்லாமல் பார்த்து கொள்கின்றனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ம்,மத்தியில் குட்டையை குழப்பவும் திட்டம் உள்ளது. முதல் காட்டமாக பிற கட்சி பிரபலங்களை கொத்தாக அள்ள அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக, பாமக ,தேமுதிக, பாஜக என்று அடங்கும். அப்படியே அவர்களை செயல்பாடுகளை முடக்கி விடுவதுதான் அரசின் திட்டம். எதிரி பலவீனப்படும் நேரத்தை பார்த்து அதிரடி தொடரரும் எனலாம் முதல் கட்டமாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இப்போதே அதற்கான வேலைகளை கனகச்சிதமாக செய்து வருகிறார் .சேலத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் நேரடியாகவே அதிமுக மீது புகாரை அள்ளி தெளித்தார். தேர்தல் கூட்டணியில் துரோகம் என பேசியது சர்ச்சையாகி விட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இப்படி அவர்களுக்கு குடுமிப்பிடி சண்டை நடப்பதை திமுக தலைமை ரசிக்கிறது. இதில் நல்ல பலன் கிடைக்கும் என்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நகராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியாகும்.குறிப்பாக ஜனவரி 3வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வரும் .அப்போது திமுக கையே வலுவாகும் எனபதே உண்மை.
– எஸ்.ரவீந்திரன்
Leave a Reply