பாமக எம்எல்ஏவின் பூமிபூஜை…
திமுகவினர் தகராறு …
இது சேலம் மாவட்டத்தில்.
சேலம் மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ அருள் முத்துநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று அங்கு தரையில்
அமர்ந்து கற்பூரம்
பொருத்தி பூமிபூஜை போட்டு சாமி கும்பிட்டார். கட்டிடத்திற்கு பூமி பூஜை போடுவதாக ஒப்பந்ததாரர் மூலம் அறிந்து கொண்ட திமுகவினர் அங்கு கூடியிருந்தார்கள். இதை
தொடர்ந்து அங்கு பாமக,
திமுக, நிர்வாகிகளுக்கு இடையே இடையே வாக்குவாதம்
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டர்கள்.
அங்கு வந்த ஓமலூர்
டிஎஸ்பி சஞ்சீவ்குமார்
மற்றும் போலீசார், இரு
தரப்பையும் அங்கிருந்து கலைந்து
செல்லுமாறு அறிவுருத்தினர்.
மேலும், எம்எல்ஏ அருளையும் அங்கிருந்து அழைத்து வந்தனர் காவல்துறையினர் . அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள திமுக நிர்வாகிகள் கேட்ட பொழுது இங்குள்ள பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டநிதி 2.18 கோடி ரூபாய்(இது சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நிதி அல்ல) ஒதுக்கீடு செய்து 13/02/25 அன்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
திடீரென்று சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாட்டாளி மக்கள் கட்சியினை சேர்ந்த விலிகி அருள் தனக்குத்தானே விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கத்தில் , முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய கட்டிடத்திற்கு மீண்டும் ஒரு முறை பூமி பூஜை தேவையா?
அதை ஏற்காமல் விடாப்பிடியாக இன்று காலை 9 மணி அளவில் வெளி ஆட்களை அழைத்துக் கொண்டு அடாவடியாக எங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளால் முதலமைச்சரையும் சுற்றுலாத் துறை அமைச்சரையும் கேவலமாக பேசிவிட்டு வெளியே சென்று உண்மைக்கு மாறாக பேட்டி அளித்துள்ளார்.
இது மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் இவரது நாடகம் தமிழ்நாடு அறியும். எங்களது கோரிக்கை சட்டமன்ற உறுப்பினர் வரவே வேண்டாம் என்பது அல்ல, கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த கட்டிடம் வருவதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சரையும் கழகத் தோழர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் வரவழையுங்கள் என்று கூறினோம்.
இதுதான் எங்களின் கோரிக்கை ஆனால்
நான் தான் இப்பள்ளியை தரம் உயர்த்தி புதிய கட்டிடத்தை இப்பகுதி மக்களுக்காக ஏற்பாடு செய்தது போல் ஒரு மாய பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார் அருள் எம்எல்ஏ “யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது”.
இவர் முத்துநாயக்கன்பட்டியில் வாழும் விஸ்வகர்மா சமூகத்தை சார்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசியதனால் மனக்கசப்பில் உள்ள மக்களை திசை திருப்ப இப்படி ஒரு கபட நாடகம் நடத்துகிறார்.
எங்களளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வருவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எங்களது அமைச்சர் முயற்சி செய்து பெற்ற பள்ளி கட்டிடத்திற்கு அவசரமாக அமைச்சர் இல்லாமல் பூஜை செய்வதற்கு என்ன நிர்பந்தம். திமுக நிர்வாகி இவ்வாறு தெரிவித்தார்.
எம்.எல்.ஏ அருள்
கூறும்போது, நான் பூஜை
செய்ய வரவில்லை, இடத்தைப் பார்த்து பணிகளை பார்க்கவே வந்தேன். ஆனால்,
திமுகவினர், வாக்குவாதம் செய்து என்னையே
தள்ளிவிட்டனர் என்று
தெரிவித்தார்.
பாமக எம்எல்ஏ அருள் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வண்ணம் உள்ளார்.
– இரா.சீனிவாசன்
Leave a Reply