Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை- எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு… மாணவர்கள் உட்பட ஏழு பேர் போக்சோவில் கைது.

மதுரை-
எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு…
மாணவர்கள் உட்பட ஏழு பேர் போக்சோவில் கைது.

மதுரையில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொடர் தொந்தரவு தொடர்பாக பிளஸ்டு மாணவர்கள் இரண்டு பேர் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் 17 வயது சிறுவர் மூவர் இளைஞர்கள் என போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் .
 நோட்டு பேப்பர் வாங்க கடைக்கு சென்றவர் நீண்ட நேரமாகவும் வீட்டுக்கு வரவில்லை பெற்றோர்கள் சிறுமையை தேடி பல இடங்களில் தேடி அலைந்து உள்ளனர். அப்பொழுது,
எதிரில் வந்த சிறுமி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார் .
இது குறித்து போலீசாருக்கு பெற்றோர்கள் தகவல் தெரிவித்தனர். விசாரணையில், சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் முத்துக்குமார் வயது 18.
ஒரே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பிளஸ் டூ மாணவர்கள் இருவர் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் 17 வயது சிறுவர்கள் கடைக்கு வந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. கடைக்கு வந்த முத்துக்குமார் வலுக்கட்டாயமாக தன் கூட்டாளியுடன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
தவிர நீண்ட நாட்களாக சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதியானது அவர்களை ,
மதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ
 சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .
காவல்
துறை தெரிவிக்கிறேன் தனக்கு  தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த குறித்து பெட்றோரிடம் கூற சிறுமி பயந்துள்ளார். மனதளவில் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ,
மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம் என, காவல்
துறையில் தெரிவித்துள்ளனர். மதுரையில்
போக்சோ வழக்கில் ஏழு பேர் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-நா.ரவிச்சந்திரன்