தென்காசி- செங்கல் சூளையால் – சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தென்காசி-
செங்கல் சூளையால் – சட்டம் ஒழுங்கு பிரச்சனை
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தென்காசி  மாவட்டம் சிவகிரி பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் மோதல் சம்பவம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிவகிரி பகுதி பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பகுதியில்  சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிவகிரி பகுதியில் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப் படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் சிலர் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுற்றுச்சூழல் துறை மற்றும் பல்வேறு துறைகளுக்கும் புகார் மனு அளித்து வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து
சிவகிரி  பகுதியில் அனுமதியின்றி இயங்கி வரும் செங்கல் சூளைகளை கண்டறிந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார் அதன்படி படி தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவில் அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளை ஆய்வு மேற்கொள்ள கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்ற பொழுது செங்கல் சூளை உரிமையாளர்கள் ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை . அதனைத் தொடர்ந்து இதுசம்மந்தமான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது .

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றஆலோசனைக் கூட்டத்திற்கு சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா தலைமை தாங்கினார் சிவகிரி தாசில்தார் ரவிக்குமார் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் மாவட்ட உதவி இயக்குனர் (கனிமம்) வினோத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வம்   சிவகிரி ரேஞ்சர் ஆறுமுகம் சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வருவாய் ஆய்வாளர் குகன் கிராம நிர்வாக அதிகாரிகள் சிவகிரி லோகநாதன் ராயகிரி
 செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கணேசன் குருநாதன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது சிவகிரி வட்டத்தில் இயங்கி வரும் சிறு செங்கல் சூளை உரிமையாளர்கள் சில  கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். அதன்படி
சிவகிரி வட்டத்தில் இயங்கி வரும் செங்கல் சூளைகளானது ஏற்கனவே உரிமம் பெற்று இயங்கி வருகிறது எனவும், மேற்கண்ட செங்கல் சூளைகளுக்கு பதிவு சான்று உரிமத்தினை புதுப்பிக்க விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது எனவும். மேற்கண்ட விண்ணப்பங்களின்மீது பரிசீலனை செய்து உரிமம் வழங்கப்பட வேண்டும் எனவும்

 சுற்றுச்சூழல் துறை,  வனத்துறை மற்றும் பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட அமைப்புகள்  தற்போது செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளில் நடைமுறைப் படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது பற்றி தங்களுக்கு தற்பொழுது தான் தெரியவருகிறது. எனவும் மேற்கண்ட அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி செங்கல்
 சூளையினை மாற்றம் செய்து நடத்துவதற்கு 2 வருடங்கள் கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.  

அனுமதியின்றி இயங்கி வரும் செங்கல் சூளைகளை நிறுத்தம் செய்ய வேண்டுமென சிவகிரி வட்டாட்சியர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவிப்பாணையை  திரும்பப் பெற வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளனர்.

 மேற்கண்ட அறிவிப்பாணையை திரும்பப் பெறும் பட்சத்தில் செங்கல் சூளைகளை அரசு அலுவலர்கள்
 கள ஆய்வு செய்ய முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்

 மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும்  நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என சிறு சிறு செங்கல் சூளை உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சிவகிரி கோட்டாட்சி தலைவர் உத்தரவின்படி சிவகிரி பகுதியில் செயல்பட்டு வந்த 43  செங்கல் தயாரிக்கும் சூளைகளில் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இந்நிலையில் மீதமுள்ள சூளைகளையும் மூடும் விதமாக, சிவகிரியின் வருவாய் கோட்டாட்சியர் செங்கல் சூளைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் செங்கல் சூளை தயாரிப்பு பணிக்கு மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை எதிர்த்து வழக்கில்  சிவகிரி பகுதியைச் சார்ந்த மாரிமுத்து மற்றும் பூமிநாதன் உள்ளிட்ட ஒன்பது பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்

எனவே தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவில், சிறு தொழிலாக நடத்தப்படும் செங்கல் சூளைகளுக்கு உரிமம் வழங்க கோரியும், மேலும் செங்கல் சூளை நடத்தும் பணிகளில் மாவட்ட வருவாய் துறையினர் தலையிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், தென்காசி மாவட்ட ஆட்சியர், சிவகிரி வருவாய் கோட்டாட்சியர் 13 தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில்
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சார்ந்த நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் அணியின் பொறுப்பாளர்  சுடர் கார்த்திக்   அவர் சமூக ஆர்வலரான இவர் சிவகிரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட அரசு உரிமம் இல்லாத முறைகேடாக இயங்கிக் கொண்டிருக்கும் செங்கல் சூளைகளுக்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வந்தார் மேலும் தில்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்துள்ளார் . மேலும் மண்ணை அள்ளுவது குறித்தும தடை செய்யப்பட்ட பகுதியில் செங்கல் சூளைகள் நடத்துவது குறித்தும்   தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சிவகிரி காந்தி கலையரங்கம் அருகே   கார்த்திக் தனியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது   திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் சுடர்கார்த்திக்கை தாக்கியுள்ளனர்.இதில்  சுடர் கார்த்திக் பலத்த காயம் அடைந்துள்ளார்.

 இது குறித்து தகவல் இருந்த சிவகிரி சப் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கார்த்திகை சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை  அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து சுடர் கார்த்திக் சிவகிரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மூன்று பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார் மேலும் எதிர் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தொடர் சிகிச்சையில் இருக்கும் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சுடர் கார்த்திக்கிடம் கேட்ட போது:-

தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியில் உரிய அனுமதியில்லாமல் 150 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழலுக்கு கேடு கேட்பது ஏற்படுவதோடு வன விலங்குகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது எனவே இது தொடர்பாக தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் வனத்துறை கனிமவளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் புகார் அளித்தேன்.

அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்தப் பகுதியில் செங்கல் சூளை நடைபெறுவதற்கு தடை விதித்தனர் ஆனாலும் அதையும் மீறி செங்கல் சூளை உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்று அந்த உத்தரவுக்கு தடை பெற்றதோடு தொடர்ந்து அரசு விதிகளுக்கு புறம்பாக சட்ட விரோதமாக செங்கல் சூளைகளை நடத்தி வந்தனர் இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் கனிமவளத்துறையில் இருக்கும் பல்வேறு ஆதாரங்களுடன் கடந்த வாரம் புகார் அளித்தேன் அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சட்டவிரோத செங்கல் சூளை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் என்னை தீர்த்து கட்ட சதி செய்துள்ளனர் அதன்படி நேற்று முன்தினம் இரவு நாம் சிவகிரி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது விஸ்வநாத பேரி பகுதியைச் சார்ந்த செங்கல் சூளை உரிமையாளர் கஜேந்திரன் மற்றும் அவரது மருமகன் வழக்கறிஞர் சதீஷ் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் என்னை வழிமறித்து என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் பலத்த காயமடைந்த நான் சிவகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். இது சம்பந்தமாக சிவகிரி காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தது செய்துள்ளனர்.
மேலும் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என் மீதும் சிவகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் நான் தொடர்ந்து செங்கல் சூளைகளுக்கு எதிராக புகார் அளித்து வருவதால் அதனை விசாரிக்க வரும் அதிகாரிகள் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் சுடர் கார்த்திக் தொடர்ந்து புகார் கொடுப்பதால் தான் நாங்கள் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது எனவே அவரை புகார் கொடுக்க விடாமல் தடுப்பதற்கு என்ன வழி என்று யோசியுங்கள் என்று அதிகாரிகள் கூறியதால் செங்கல் சூளை உரிமையாளர்கள் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவே தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனைகள் தலையிட்டு சட்ட விரோதமாக செங்கல் சூளை நடத்தி வரும் உரிமையாளர்கள் மீதும் தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுடர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அந்தப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் விசாரித்த போது சிவகிரி பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் தயாரிக்கும் நடத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உடலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் மேலும் இதனால் சிவகிரி வட்டார பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் மட்டுமன்றி அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகளும் பயன் பெற்று வந்தனர்.

இப்போது இது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து புகார் அளித்ததால் செங்கல் தயாரிக்கும் சூளைகள் மூடப்பட்டதால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்ததோடு சிவகிரி வட்டார பகுதிகளில் பண நடமாட்டமும் வெகுவாக குறைந்து உள்ளது. மேலும் இது தொடர்பாக அந்தப் பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டு அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது.

எனவே தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனைகள் தலையிட்டு இருதரப்பையும் அமைதிப்படுத்துவதோடு தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலையும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதோடு  சிவகிரி பகுதியில் வாழும் மக்கள் அமைதியாக வாழ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

-முத்துசாமி