பல சோதனை களை எல்லாம் கடந்து இன்று 75-வது ஆண்டு சாதனை நோக்கி பயனமாகின்ற ஒரே இயக்கம் தி.மு.க.தான் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணரில்,
நடை பெற்றது. கூட்டத்திற்கு , அவைத் தலைவர தங்கராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், வடக்கு
மாவட்ட கழக செயலாளரும் , நிதி அமைச்
சருமான தங்கம் தென்னரசு பங்கேற்று பேசினார். அப்போது,
அவர பேசியதாவது: தமிழகத்தின் முதல்வரும் திராவிட கழகத்தின் தலைவர் மாநகர முக ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக பொது உறுப்பினர் கூட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பொது உறுப்
பினர்கள கூட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்தமைக்காக கழக நிர்வாகி களுக்கு நன்றி தெரிவித்து க் கொள் கிறேன். திராவிட இயக்கம் உருவாக்
கப்பட்டு இன்றோடு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. தந்தை பெரியார், அண்ணா உருவாக்கிய கழகத்தை எத்தனையோ சோதனைகளை வந்தபோதும் கூட கழகத்தை தொய்வின்றி கட்டிக் காத்து இன்று லட்சக்
கண்கான தொண்டர்களின் மாபெரும இயக்கமாக திராவிட இயக்கம் அமைந்துள்ளது. தலைவர் கருணாநிதிக்கு பிறகு தலைமை யேற்று நடத்தி வரும தளபதியார் மக்களின் நம்பிக்கை உள்ள ஒரு மாபெரும் இயக்கமாக உருவாக்கி உள்ளார்.
தமிழக முதல்வர் அன்மையில் அமெரிக்கா சென்று தமிழகத்தின் தொழில் வளர்சிக்காக இதுவரை இல்லாத அளவுக்கு 10 ஆயிரம் கோடி மதிப்பில் தொழில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்துள்ளார். தொடர்ந்து, தமிழகம் பொருளாதார வளர்ச்சி பாதையில் சென்று கொண்
டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கழக ஒருங்கி
ணைப்புக்குழு அமைத்துள்ளார். இந்தக்குழுவின் என்னை உறுப்பினராக உங்கள் ஆதரவோடு முதல்வர் நியமித்து ள்ளார். ஒருங்
கிணைப்பு குழுவின் அங்கம் வகிக்கும் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் கழக வளர்ச்சி குறித்து அவ்வப் போது ஆலோசனை செய்து வருகிறோம். கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் , தேர்தல் காலங்களில் நாம் குறிப்பாக தேர்தல் வெற்றிக்கு இளைஞரணி யின் செயல்
பாடுகள் குறித்து நல்லதொரு தெளிவாக முடிவுகளை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறார். தி.மு.க வை தமிழகத்திலிருந்து விரட்டி விடுவோம்! தி.மு.க காணாமல் போய்விடும் என்றெல்லாம் சொன்னவர்கள் காணாமல் போய் விட்டார்கள். கடந்த தேர்தலில் மக்கள் ஆதரவோடு அமோகமாக வெற்றி பெற்றோம். தி.மு.க அரசு செய்த சாதனைகளை மக்களிடம் நேரில் எடுத்து சொல்லுங்கள். அரசின் திட்டங்கள் கிடைக்
காதவர்களுக்கு முழுமையாக அவர்களுக்கு கிடைக்க நீங்கள் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும், திமுக, மக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பை மையமாக வைத்து தீவரமாத பணியாற்றுங்கள்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரை 7 சட்ட மன்ற தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற வேண்டும் அதற்கு அனைவரும் அயராது பாடுபங்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு பல்லாயிரம் கோடி ரூபாய்
களுக்கான முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்குப் பெற்றுத்
தந்த, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும்.
•நாடாளுமன்ற தேர்தலலில் 40/40 வெற்றிக்காக வாக்களர்கள், கழக முன்
னோடிகள், மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும்,
வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply