அடேங்கப்பா ஆறு பேரிடம் கலந்துரையாடலில் கவிழ்ந்தவர்கள்?

– வேலூர் மாவட்ட வில்லங்கம்
பொது வாழ்க்கையில் உழைத்து நேர்வழியில் முன்னுக்கு வருபவர்களைவிட குறுக்கு வழியில் முன்னுக்கு வருபவர்களின் பின்னனி பெரிதாக பேசப்படுகிறது. குறிப்பாக அரசியல் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், உதாரணத்திற்கு வேலூர் மாவட்டத்தை சொல்லுகின்றனர். அதிலும் குறிப்பாக குடியாத்தத்தை மையமாக வைத்து இயங்கும் ஆறு  பேரின் ஆக்டீவான செயல்பாடுகள். ஆறு பேரை கண்டாலே இப்படி பெட்டி பாம்பாக அடங்கிடறாங்க அதிகாரத்தில் இருப்பவர்கள், அது அரசியல்வாதியாக இருந்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் ஆறு பேரின் கவனிப்பு அப்படி சாம தான பேத தண்டம் என்று சொல்லுவார்களே.. பணத்துக்கு மயங்குவார்களா என்று முன்கூட்டியே பல்ஸ் பார்த்து களமிறங்கி சாதிக்கின்றனர் அந்த ஆறு பேர்!
இதுக்கு பெருசா மெனக்கிட வேண்டியதில்லை மும்பைக்கு போகனும் ஏலத்தில கலந்துகிட்டு ஒரு மாதத்திற்கு என்று ஏலம் எடுத்துக் கொண்டு குடியாத்தம் திரும்புபவர்கள் திருமண மண்டபங்கள், புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பங்களாக்கள் என்று மையம் கொள்கின்றனர். கைவசம் உள்ள வேலைகளை முடிக்கப்போவது அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்பதை முடிவு செய்தவுடன் வீடியோ காலில் கலந்துரையாடல் முன்னோட்டம் அதன்பிறகு சம்பந்தப்பட்ட பைல்களோடு நம்பகமான லொகேஷனில் கலந்துரையாடல் ஆரம்பமாகும். கலந்துரையாடல் சக்சஸ் ஆனால் இன்னொரு பக்கம் பைல்கள் கையெழுத்து ஆகும். வேலூர் மாவட்டத்தில் நிறைய அரசியல்வாதிகள் அதிகாரிகளை கலந்துரையாடல் நிகழ்வு மூலம் வீழ்த்தி காரியம் சாதிக்கும் அந்த அடேங்கப்பா ஆறு பேர் லேட்டஸ்ட் நிலவரப்படி ரொம்ப பிஸி! காரணம் மக்கள் பிரதிநிதிகளைவிட பவர்புல்லாக இருக்கிறார்கள் என்பதுதான் அதனால எந்த வேலை ஆகனும்னாலும் ஆறு பேரை தேடி ஓடறாங்க அவங்களும் பணத்தை வாங்கிகிட்டு  கலந்துரையாடல் மூலமா வேலையை கச்சிதமா முடிச்சி தர்றாங்க குடியாத்தத்தை சேர்ந்த அந்த ஆறு பேரை மும்பையில ஏலம் நடக்கற சபையில மாதம் ஒருமுறை தவறாம பார்க்கலாம் என்கின்றனர். இதுவரையில் ஆறுபேரின் கலந்துரையாடலில் கவிழ்ந்தவர்கள் எத்தனை பேரோ…

One thought on “அடேங்கப்பா ஆறு பேரிடம் கலந்துரையாடலில் கவிழ்ந்தவர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *