ஐந்துமுறை பேரூராட்சி தலைவர், இரண்டாவது முறையாக எம்எல்ஏ அப்படியே மந்திரி தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போவார் ஒவ்வொரு முறையும் பேரூராட்சி தேர்தலின்போ எதிர்கட்சிகளோடு கூட்டணி அமைத்து ராஜதந்திரமக வெற்றியை எட்டிப்பிடித்தார். தன்னுடைய அரசியல் குருநாதர் மந்திரி பொன்முடி மூலமாக திமுகவில் விரும்பிய பதவிகளை அடைந்து, உச்சபட்ச பொருளாதாரத்தையும் தொட்டார் அடுத்தது என்ன? எம்எல்ஏ ஆகனும் பொன்முடி ஆதரவு நிலையில் இருந்து வெளியே வந்தார். கட்சியின் நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தை கிழக்கு மேற்கு என்று பிரிக்க, கிழக்கு மாவட்ட செயலாளரானவர் எம்எல்ஏ சீட்டு கேட்டு அறிவாலயத்தை முட்டி மோதினார் பொன்முடியின் எதிர்ப்பாளர் திருவண்ணாமலை எ.வேலுவின் மூலம் அதுவும் சாத்தியமானது. ஆனால் திமுக ஆட்சிக்கு வரவில்லை அதனால் என்ன? அதிமுக மந்திரி சி.வி.சண்முகத்தோடு உறவாடி பொருளாதாரத்தை மேலும் உயர்த்தினார் மாவட்ட செயலாளர் அதிகாரத்தில் கட்சியில் சார்பு அணிகளில் உள்ள பதவிகளை நிரப்பிய வகையில் பொருளாதாரத்தையும் திமுக நிர்வாகிகளின் எதிர்ப்பையும் ஒருசேர சம்பாதித்தார் மீண்டும் சீட்டு கிடைக்க கூடாது என்று பெரும்பான்மை திமுக நிர்வாகிகளோடு பொன்முடியும் தடுப்பு சுவர் கட்ட, அதையும் தாண்டி எம்எல்ஏ சீட்டு வாங்கி ஜெயித்ததோடு சிறுபான்மைத்துறை மந்திரியாகவும் ஆகிவிட்டார் செஞ்சி தொகுதியின் கே.எஸ்.மஸ்தான்!
கொரோன காலங்களில் செஞ்சி தொகுதியை சுற்றி சுற்றி வந்து உதவிகளை வழங்கிய வகையில் மஸ்தானுக்கு நல்ல பெயர். இரண்டாவது முறையாக ஜெயித்து மந்திரியான பிறகு தூங்குகிற நேரம் போக மற்ற நேரங்களில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மனைவி மக்களை கூடவே கூட்டிகிட்டு போகும் மஸ்தான் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. நல்லது கெட்டதுனு ஒரு நிகழ்ச்சியைகூட விடமாட்டார் கோயில் கும்பாபிஷேகம் என்றால்கூட முதல் ஆளா போய் பரிவட்டம் கட்டிக்குவார். தொகுதி மக்கள் மஸ்தானை தேடி வரும்வரை காத்திருப்பதில்லை இவரே தேடி போய் விடுகிறார். மஸ்தான் மகன் மொக்தியார் அலி திமுக நிர்வாகிகளை நல்லாவே பார்த்துக்கறார் உதவிகள் செய்வதோடு தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். மந்திரியாக இருப்பதால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மஸ்தானுக்கு எந்த சிரமமும் இருக்காது அறிவாலயத்தில் தன்னுடைய தொடர்புகளை பலப்படுத்திக் கொண்ட மஸ்தான் பொன்முடிக்கு எதிரான தலைவர்களோடு நெருக்கமாக இருக்கிறார். குருநாதர் பென்முடிக்கும் சிஷ்யன் மஸ்தானுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் தங்கள் மாவட்டங்களில் ஒரு வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைகூட திமுகவில் வளராமல் பார்த்துக் கொண்டனர், இது சாதனைதானே!
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அடைய சம்பந்தப்பட்டவர்கள் பல லட்சங்களை இழந்துதான் அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் மந்திரியான பிறகு மஸ்தான் நடவடிக்கைகள் பரவாயில்லை என்கின்றனர் செஞ்சி தொகுதி உடன்பிறப்புகள் இந்த நிலை தொடர்ந்ததால் கட்சியினர் மத்தியிலும் தொகுதி மக்கள் மத்தியிலும் நல்லபெயரை மஸ்தான் தக்க வைத்துக் கொள்ளலாம். வட மாவட்ட எம்எல்ஏக்களில் மஸ்தான் அளவிற்கு ஒருவர்கூட தொகுதியை சுற்றி இருக்க மாட்டார்கள் இதை மஸ்தானின் நூறுநாள் சாதனையாக சொல்லலாம்.
Leave a Reply