கர்நாடக பாஜகவில் முதல்வருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மாறாக, கர்நாடக பாஜக தலைவர் ஒருவருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அங்கு, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று பாஜகவின் புதிய தலைவராக வலம்வரத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் எடெலா ராஜேந்தர்.
நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 3 மக்களவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் பல தொகுதி முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தன. ஆனால் தெலங்கானாவின் ஹுசூராபாத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு பாஜகவுக்கு மகிழ்ச்சியையும், புது நம்பிக்கையும் அளித்துள்ளது.
நான்கு முறை இதே தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்தர் தெலங்கானா மாநிலம் உதயமாக போராடியவர்களில் முக்கியமானவர். சந்திரசேகர் ராவ் ஆட்சியிக் நிதித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2018 தேர்தலில் வெற்றி பெற்று சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூன் மாதம் அவர் மீது நில அபகரிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, தனது எம்எல்ஏ பணியில் இருந்தும் விலகிய ராஜேந்தர், டிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தற்போது , 23,865 வாக்குகள் வித்தியாசத்தில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளரை ராஜேந்தர் தோற்கடித்துள்ளார்.
ராஜேந்தர் வெற்றிக்கு பிறகு அவரின் ஆதரவாளர்கள் பலர் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். தயாகர் ராவ், தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், சபிதா இந்திரா ரெட்டி மற்றும் கங்குலா கமலாகர் ராவ் என பலர் பாஜக முகாம் தேடிச் செல்கின்றனர்.
அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் காங்கிரசில் முக்கிய நபராக இருந்தவர். ஆசிரியர் தேர்வில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இதனால் முதல்வர் பதவி அவரை தேடிச்சென்றது. அதுபோல் ராஜேந்தருக்கும் நேரலாம் என அவரது ஆதரவாளர்கள் அமோக மகிழ்ச்சியில் உள்ளனர். இத்தகைய பேச்சு தரும் உற்சாகத்தில் விரைவில் மாநிலம் தழுவிய யாத்திரையை ராஜேந்தர் மேற்கொள்ளப் போகிறாராம்.