வாலாஜாப் பேட்டை விறுவிறு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சிக்குட்பட்ட வெத்தலைக்காரத் தெருவில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இங்கு மாட்டிறைச்சி வியாபாரம் நடைபெற்று வருகிறது. மாட்டிறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இறைச்சி வாங்க வரும் மக்களிடம் நூதன முறையில் கொள்ளை அடித்து வருவதாக வாலாஜாப் பேட்டை பொதுமக்கள் வருத்தத்தோடு குற்றம் சாட்டுகின்றனர்.
உள்ளூர் வாசிகளுக்கு ஒரு கிலோ 200 ரூபாயும் வெளியிலிருந்து வரும் நபர்களுக்கு ஆட்களுக்கு ஏற்றார்போல் ரூபாய் 240, 250 மற்றும் 270 என்று நூதன முறையில் கொள்ளை அடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், இவர்கள் இறைச்சிக்குப் பயன்படுத்தும் மாடுகள் நோய்வாய்ப்பட்ட மாடுகள், அடிபட்ட மாடுகள், இறக்கும் தருவாயில் இருக்கும் மாடுகள் போன்றவற்றை குறைந்த விலைக்கு வாங்கி வந்து வெட்டி விற்பனை செய்து வருவதாகவும் வியாபாரம் செய்யும் கடைகள் சுத்தமில்லாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், கறியை வெட்டும் நபர்கள் கறியை வெட்டும்போது பீடி, ஹான்ஸ், புகையிலை, பாக்கு போட்டுகொண்டு எச்சிலை அங்கேயே துப்புவதும் எச்சில் துடைத்த கையோடு சுகாதாரமின்றி கறியை வெட்டுகிறார்கள் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, உணவு பாதுகாப்பு மேலாண்மை துறை அதிகாரிகள் வாலாஜாப்பேட்டை வெத்தலக்கார தெருவில் இறைச்சி வணிகம் செய்யும் கடைகள், கறிக்கு சரியான விலை நிர்ணயம் செய்து, சுகாதாரமான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்று நேர்முக ஆய்வு செய்து, நூதன முறையில் கொள்ளையடித்து வரும் கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கோமாரி வாய் புண், அடைப்பான் நோய், காய்ச்சல், வயிறு வீக்கம் இப்படி நோய்வாய்ப்பட்ட மாடு அல்லது இறந்த மாட்டுக் கறி சாப்பிடுவதினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து ராணிப்பேட்டை கால்நடைத்துறை உதவி இயக்குநர் பாஸ்கரனிடம் கருத்து கேட்டபோது,
அவர், ”நோய் தாக்கப்பட்ட அல்லது இறந்த மாட்டிறைச்சியை சாப்பிடுவதினால் மனிதர்களுக்கு எந்த நோயும் ஏற்படாது. ஏனென்றால், பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிர்களினால் நோய் தாக்கப்பட்ட அல்லது இறந்த மாட்டிறைச்சியை யாரும் பச்சையாக சாப்பிடுவது கிடையாது. நன்கு வேகவைத்து சாப்பிடுவதுதான் வழக்கம். அப்படி வேகவைக்கும் போது குறைந்தபட்சம் 100 டிகிரி அல்லது 120 டிகிரி செல்சியஸில் கறி வேகிறது. இதனால் மாட்டு இறைச்சியில் உள்ள நுண்ணுயிர்களான பாக்டீரியா வைரஸ்கள் இறந்துவிடுகிறது.
எனவே, நுண்ணுயிர்கள் இறப்பதினால் மனிதர்களுக்கு எந்த நோய் தாக்கமும் ஏற்படாது. நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை” என்கிறார் ராணிப்பேட்டை கால்நடைத்துறை உதவி இயக்குநர் மருத்துவர் பாஸ்கரன்.
மேலும் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் வெங்கடேசனிடம் கருத்து கேட்டபோது அவர், ”நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்துபோன மாட்டிறைச்சி வியாபாரம் செய்வது தவறு. மாட்டிறைச்சி வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் நேர்மையான முறையிலும், உண்மையும் தூய்மையுமான முறையிலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரம் செய்ய வேண்டும்.
ஆட்களுக்கு ஏற்றார்போல் வியாபாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் நியாயமான முறையில் ஒரே விலை நிர்ணயித்து வியாபாரம் செய்ய வேண்டும். நோய்வாய்ப்பட்ட மாடுகளை வெட்டி நூதன முறையில் வியாபாரம் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது. எனவே, அதனைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஒருசில வியாபாரிகளால் ஒட்டுமொத்த வியாபாரிகளின் பெயரையும் கெடுக்கும் அவநிலை ஏற்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையான கடைகளில் இதேநிலை நீடிக்கிறது. மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
இதுபோன்ற வியாபாரிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
– சுள்ளி ஆனந்தன்
Leave a Reply