அரசியலில் வாரிசுகள் ஆக்கிரமிப்பது ஒன்றும் புதிதல்ல..அதிலும் திமுகவை மட்டும் அனைவரும் குறிவைத்து இந்த மரபு குறித்து விமர்சிப்பது வாடிககை. இதற்கு கரணம், திமுக என்றஆலமரத்தை வீழ்த்த ஏதாவது ஒரு கோடாரி வேண்டும் அல்லவா..? தமிழகத்தில் கூக்குரல் எழுப்பும் கட்சிகள் மற்ற மாநிலங்களை என்கணக்கில் எடுக்கவில்லை என கேள்வி எழுகிறது. நேரு காலம் முதல் வாரிசு அரசியல் தொடர்கிறது. உபி, பீஹார், ஆந்திரம் என சொல்லிக்கொண்டே போகலாம். அதைவிட தமிழகத்தில் அனைத்து கட்சிகளிலும் இந்த கலாச்சாரம் இருக்கிறது. நிலைமை இப்படி இருப்பது உண்மை என்பதற்கு கட்டியம் கூறும் விதமாக திமுகவின் போக்கு இருக்கிறது. காரணம், இன்றுள்ள திமுக மூத்த அமைச்சர்கள் தங்களை தவிர வேறு யாரும் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதில் தனி அக்கறை காட்டுகிறார்கள். அந்த அளவுக்கு வாரிசு யுத்தம் நடக்கிறது. துரைமுருகன், கதிர் ஆனந்த், என்.பெரியசாமி, மகள் கீதாஜீவன், திண்டுக்கல் பெரியசாமி மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ ,பொன்முடி அவரின் மகன், கவுதம சிகாமணி, டி.ஆர்.பாலு, மகன் டி.ஆர்.பி.ராஜா என்று சொல்லிக்கொண்டே போகலாம் சரி கதைக்கு வருவோம். திமுக மாவட்டச் செயலர்கள் குறுநில மன்னர்கள் போன்று இருப்பார்கள். கொடி கட்டும் அடிமட்ட தொண்டர்கள், மட்டும் காலம் முழுக்க அதேபணியை செய்வது இன்றும் தொடர்கிறது. இந்த அமைச்சர்கள் மட்டும் தங்களின் சொந்தபந்தங்ககள், உறவுகளை வாரிசுகளை நைசாக களம் இறங்குவார்கள். இதனால் அடிமட்ட தொண்டன் வெகுவாக பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. பதவி, சலுகை என கிடைக்கிறது. எனவே இவர்களை தங்களின் சொந்த பந்தங்களை மனதில் நிறுத்தி இப்பணியை செய்வதுண்டு ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. குப்பனோ, சுப்பனோ எளிதில் உயர் பதவிக்கு வருவார்கள். நிலைமை இப்படி இருக்க கடந்த சில தினங்களுக்கு முன் திமுவில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி, திமுக தகவல் தொழிநுட்ப பணியை செவ்வனே அலங்கரித்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2017ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டு அதன் மாநிலச் செயலாளராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார்.தியாகராஜன். இவர் முன்னாள் சபாநாயகர் பிடிஆர்.பழனிவேல் மகன். இந்த நிலையில் திடீர்ன்னு அந்த பதவியை டி.ஆர்.பி ராஜாவுக்கு அளித்துள்ளனர். ஏற்கனவே சட்டப்பேரவைத்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற பெருமை.கொண்டவர். சரி எத்தனையோ பேர் இருக்க இவருக்கு ஏன் இந்த முக்கியப்பதவி என கட்சியில் கேள்வி எழுந்துள்ளது.
தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு. இவர்ஒன்றிய அரசில் பல அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டையில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள மைய பல்தொழில் நுட்பப் பயிலத்தில் தொழிற்கல்வியும், பின்னர் புதுக்கல்லூரியில் பி. எஸ். சி படிப்பையும் படித்து முடித்தார்.
இவர் தன்னுடைய பதினாறாம் வயதில் திமுகவில் இணைந்தார். இவர் 1982 ஆம் ஆண்டு தி.மு.க.வின் சென்னை நகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். பின்னர் பெட்ரோலிய துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலிலும், 2004 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2009 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசில் கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளர் பதவியை தன்னிடம் இருந்து எடுத்துக்கொண்டதால் டி.ஆர்.பாலுவுக்கு தலைமை மீது மன வருத்தம். இருந்தாலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் மகனுக்கு அமைச்சர் பதவி வாங்க திட்டம் தீட்டினார். நடக்கவில்லை. இந்த சூழலில்தான் மகனுக்கு வேறுபதவி. இப்படி ஒரு சிலரே அனைத்து பதவிகளையும் அலங்கரித்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்.என உடன்பிறப்புக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. வேறு ஆளே கிடையாதா ..எல்லா மூத்த தலைவர்களும் இப்படி கட்சியை வளைத்து பிடித்துள்ளது உடன் பிறப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தகுதி வாய்ந்த பல மூத்த தொண்டர்கள், இளையவர்களுக்கு ஏன் அளிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதாரணத்துக்கு 85 வயது வரை போராடிய தொண்டனுக்கு ஓய்வூதியம், சலுகைகள் எதுவுமே இல்லை. கட்சி பதவி, எம்.பி., எம்எல்ஏ பதவி அப்புறம் அமைச்சர் , மேலும் உயர்பதவி என்றால் கட்சிக்கு 32 பேர்தான் முக்கியமா என்பது அடிமட்ட தொண்டனின் குமுறலாகும். திமுகவைப் பொறுத்தவரை அந்த காலம் முதல் இன்று வரை ஒரே அமைச்சர்தான் மீண்டும் மீண்டும் பொறுப்பில் இருப்பர். ஒரு சிலர் மட்டுமே மாற்றம் இருக்கும். இதுதான் திமுக ,அதிமுகவுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, அதிமுகவை பொறுத்தவரை சாதாரணத்தொண்டன் கூட குபேரனாகலாம். திமுகவில் ஒரே குடும்பம்தான் மேலும் மேலும் பதவி,பணம் பார்க்க முடியும். கொடி பிடித்தவன் கடைசி வரை கொடிதான் பிடிப்பான். கோடிகளை பெறுவதோ மேல்மட்ட தலைவன்தான் என்ற நிலை இருப்பதாக மூத்த தொண்டர்கள் குமுறுகிறார்கள். அதே போல வாரியம், ஒன்றியம், கிளை, ஆவின், கூட்டுறவு, இப்படி எல்லாம் குறிப்பிட்ட சமூகத்துக்கும், பதவியில் உள்ளவர்களின் உறவுக்கும் கொடுத்தால், மற்றவர் எப்படி சம்பாதிப்பது, வாழ்க்கை நடத்துவது என்பதேகேள்வி, உள் கட்சி விவகாரம் என்று இதை சாதாரணமாக யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது. பாலுவை பொறுத்தவரை முரசொலி மாறனுக்கு நிகராக டெல்லியில் கோலோச்சுபவர், அனைத்து உயர் பதவி, பணம் என்று பார்த்தவர், தஞ்சை பழனி மாணிக்கம் வளர்ச்சி பிடிக்கவில்லை, திருச்சி சிவா இருக்கிறார். அவர் நேரடியாக பொறுப்புக்கு வர முடியாது. தொகுதிக்கு என்ன செய்தார்கள் /அடிமட்ட தொண்டனுக்கு இவர் என்ன உதவி செய்தார். சாதர்ணமாக இவரை பார்த்து விட முடியுமா ? இவர்களை சமாதானப்படுத்தி முதல்வர் என்ன செய்யப்போகிறார் என்று புரியவில்லை,இப்படி துரைமுருகன், பொன்முடி, நேரு, பாலு, பெரியசாமி, இவர்கள் ஒருபக்கம், அதிமுகவில் இருந்து வந்த அனிதா, செந்தில்பாலாஜி, சேகர்பாபு,,கண்ணப்பன் என்று ஒருபக்கம் பதவிகளை அலங்கரிக்கின்றனர்,அப்படியானால் மற்றவர்கள் கதி என்ன என்பதே கேள்வி. எனவே பொறுப்புகளை வேண்டும், சாதாரண தொண்டன் பலன் பெற வேண்டும் என்பதே கட்சியினரின் எதிர்பார்ப்பு. திமுகவின் மிக பெரிய கட்டமைப்பை இதுபோன்ற சறுக்கல்களை கொண்டு சிதைத்துவிடக்கூடாது என்பது நலம் விரும்பிகளின் ஆசை. தெருவில் நின்று வேலை பார்க்கும் தொண்டனின் நிலையில் இருந்து முதல்வர் யோசிக்க வேண்டும். குறுநில மன்னர் போக்கை தொடரக்கூடாது . நடக்குமா? குமுறலுடன் எதிர்பார்க்கிறார்கள் திமுக தொண்டர்கள்.
– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்