பழந்தமிழ் பெருமை மிகு மதுரை மாநகருக்கு இப்போதே உள்ளாட்சி களை வந்துவிட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் இந்த முறை மதுரை மேயர் பதவி பெண்கள் கோட்டாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக, அதிமுக, என இரண்டு கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களும் தங்கள் குடும்ப பெண்களை மேயராக்கி அழகு பார்க்கவேண்டும் என காய் நகர்த்த தொடங்கிவிட்டனர். அதிமுகவில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ தனது இளைய மகளை போட்டியிட வைக்க காய் நகர்த்துகிறார். ஓ.பி.எஸ். மூலம் அதை உறுதிப்படுத்த முயல்கிறார்.
திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பாவும் தனது மருமகளை மேயராக்க துடிக்கிறார். அவரும் தனது பங்குக்கு தனது மருமகளுக்கு மேயர் சீட் வாங்க அதிமுக தலைமையை அணுகிவருகிறார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகியாக இருக்கும் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் மீது எடப்பாடி பழனிசாமி நல் அபிப்பிராயம் கொண்டிருப்பதால் அதற்கான வாய்ப்பிருப்பதாக தொண்டர்கள் பேசுகின்றனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலம் மேயர் சீட்டை பெறவும் வேறு சில மாநகர பெரிசுகள் அலைபாய்கின்றனர்.
Leave a Reply