Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்-மே தின விழாதொழிலாளர்கள் வாக்குவாதம்

மே தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு  அமைப்புகள் கொடியேற்றி
மே தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில், மதுரை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மே தின விழாவை கொண்டாடுவதற்கு இடம் வழங்க கோரி நேற்று முன்தினம் காவல்
துறையிடம் அனுமதி கேட்டதாக தெரிகிறது .

ஆனால், அனுமதி வழங்காத காவல்துறை அந்த இடத்தில் தற்காலிகமாக கொடியேற்றிக் கொள்ளுங்கள் என, வாய்மொழியாக கூறியதாக தெரிகிறது.
 இதனை ஏற்று நேற்று இரவு கட்டுமான தொழிலாளர்கள் தங்களை சங்க போர்டை வைத்து விட்டு சென்றனர். அதனை தொடர்ந்து, இன்று காலை 11 மணி அளவில் மே தின கொண்டாட்டத்தில்  கொடியேற்று விழாவிற்கு, 20க்கும் மேற்பட்டோர் வந்தபோது, அருகில் இருந்த கடையின் உரிமையாளர் கடையின் முன்பு கொடி
யேற்றுவதற்கும் போர்டு வைப்பதற்கும், அனுமதி இல்லாததால் இங்கு கொடியேற்றவா போர்டு வைக்கவோ கூடாது என, கூறியதாக தெரிகிறது.
அதனை மீறி கட்டுமான தொழிற்சங்கத்தினர் கொடியேற்ற முற்பட்டதால், கடை உரிமையாளருக்கும் கட்டுமான தொழிலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் வரை சென்றது .
தொடர்ந்து, இதுகுறித்து கடை உரிமையாளரான ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் பாண்டியனிடம் கேட்டபோது, காவல் துறையோ பேரூராட்சி நிர்வாகமோ அனுமதி தராத நிலையில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் அத்து மீறி கடையை மறித்து போடு வைத்து கொடியேற்றுவதாகவும், ஆகையால் கொடியேற்றக் கூடாது என நான் தடுத்ததாகவும் அனுமதி கடிதம் இருந்தால்  கொடியேற்றிக் கொள்ளலாம் என, கூறியதாகவும் கூறினார்.
 கட்டுமான தொழிற்சங்கத்தினரிடம் கேட்டபோது, கடைக்கும் கொடியேற்றும் இடத்திற்கும் 30 அடி தூரம் உள்ளதால் கடையின் வியாபாரம் பாதிக்கப்படாது, மேலும் காவல்துறை நீங்கள் அந்த இடத்தில் கொடியேற்றிக் கொள்ளலாம் என்று கூறியதாலயே, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம் என்றும், இது குறித்து இன்று மாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாக, கூறினார்.
அனுமதி கேட்டு காவல்துறையை அணுகும் போது முறையாக அனுமதி அளித்து இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது என, அங்கிருந்தவர்கள் கூறி சென்றனர்.
-நா.ரவிச்சந்திரன்