திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள வாழைப்பந்தலில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த பச்சையம்மன் கோவில் உள்ளது. இங்கு பச்சையம்மனுடன் மன்னார் சாமி என்ற பெயரில் சிவன் ஆருள்பாலிக்கிறார். இத்தலத்தில், சிவபெருமான் மனித உருவில் மன்னார் சுவாமியாகவும் துவார பாலகராக சிவனும் விஷ்ணுவும் உள்ள தலம் ஆடி மாதங்களில் அம்மன் கோவில்களில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கொண்டாட்டம் என்றால் வாழப்பந்தல் பச்சையம்மனுக்கு திங்கட்கிழமைகளில் கோலாகலம்தான்.
திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை மூடிய பாவம் போக்க, காஞ்சி மாநகரில் காமாட்சியாக அவதரித்தார் காமாட்சி தேவியார் காப்பாற்றியதில் அகமகிழ்ந்து பாவம் போக தேவியார்,காஞ்சிபுரத்தின் கம்பைநதி நீர் வெள்ளத்திலிருந்து மணல் லிங்கத்யருளினார் சிவபெருமான் திருவண்ணாமலைக்கு வரும் வழியில் காமாட்சி ‘உம்மை எப்பொழுதும் பிரியாமலிருக்க உமது மேனியில் இடப்பாகம் அளிக்க வேண்டும்;” என வேண்டிய அன்னையிடம்’ அருணை மாநகருக்கு சென்று என்னை நோக்கி தவமிரு. அங்கே உமக்கு இடப்பாகம் அளிப்போம்” எனக்கூறி மறைந்தார் பரமன்.
வாழபந்தலில் பச்சையம்மனாகவும், திருவண்ணாமலையில் காமாட்சியாகவும்
பார்வதி தேவி சிவபெருமானிடம் இடபாகம் பெற்றிட வேண்டி காஞ்சியில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில் வாழப்பந்தல் அமைத்து மணலில் லிங்கம் பிடித்து வழிபட எண்ணினார். அதற்கு தேவையான நீர் தனது பிள்ளைகளான முருகனையும் கணேசனையும் அழைத்து நீர்கொண்டு வர சொல்கிறார். இருவரும் புறப்பட்டு வெகுநேரமாகிவிடவே பார்வதி தேவியே தனது கைப்பிரம்பினால் பூமியை தட்டி ஓர் நீர்ஊற்றை ஏற்படுத்தினார். அந்நீரினைக் கொண்டு மணல் லிங்கம் பிடித்து முடிக்கிறார். அப்போது பார்வதி தேவி பூஜை செய்யும்வேளையில், அருகிலிருந்த வாழைத்தோட்டத்தில் இருந்த அரக்கன் ஒருவன் இடையூறுகள் பல செய்தான். அதையறிந்த சிவனும் விஷ்ணுவும் வரமுனி செம்முனியாக அவதாரம் எடுத்து அரக்கனை வதம் செய்தனர். பின்னர் பார்வதி தேவி சிவவழிபாட்டை முடித்துக் கொண்டு திருவண்ணாமலை புறப்பட்டு சென்றார்.
பின்னர் திருவண்ணாமலை வந்தடைந்த காமாட்சியம்மன் வடக்கு வீதியில் நுழைந்து. கௌதம மகரிஷியின் ஆசிரமத்தை (பவழக்குன்று) வந்தடைந்தர் திருவண்ணாமலையின் தலரிஷியான கௌதமரின் ஆலோசனையின்படி மலைக்கு நேர்கிழக்கு திசையில் பர்னசாலை அமைத்து தவமியற்றினார். அன்னையின் தவத்தை கலைக்க முயன்ற மகிஷாசூரனை எதிர்த்து சப்தமாதர்களும், அஷ்டபைரவர்களும், காளியும், துந்துமியும் அருணைநாயகியும் கடும்போர் புரிந்தார். ஆனாலும், எருமைதலை கொண்ட மகிஷாசூரனை அழிக்க இயலவில்லை.
பின்னர் மகாசக்தி துர்க்கையம்மன் மகிடன் தலையை தனது வாளால் வெட்டி வீழ்த்தி, தனது காலால் அவனது தலையை மிதித்த பின்னர் மகிடன் உயிர் பிரிந்தது. உயிர் பிரிந்து தலையற்று கிடந்த மகிஷாசூரனுடைய அறுபட்ட கழுத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. கொடிய அரக்கணுடைய கண்டத்தில் ஒரு சிவலிங்கமா என ஆச்சர்யத்துடன் அதனைக்கொண்டு வந்து காமாட்சி தேவியிடம் கொடுத்தாள் துர்க்கை. தேவியாரின் திருக்கரத்திலேயே ஓட்டிக்கொண்டுவிட்டது அந்த லிங்கம் தன் கையோடு ஒட்டிக் கொண்டதற்கான காரணம் என்னவென்று கௌதமமகரிஷியிடம் கேட்டார் காமாட்சி தேவியார்.
‘அகத்தியரின் சாபத்திற்குட்பட்ட வரமுனி என்கிற முனிவர் எருமைகடா தலை கொண்ட அரக்கனாக (மகிஷாசூரன்)மாறி காட்டில் அலைந்து திரிந்த போது. மன்னதரிஷி என்கிற முனிவர் கையில் லிங்கத்தோடு தவமியற்றிக் கொண்டிருந்தார். அவரை மகிஷாசூரன் அப்படியே விழுங்கிவிட்டான். வயிற்றில் மன்னதரிஷி ஜீரணமாகிவிட்டாலும். அவரது கையில் இருந்த சிவலிங்கம் மட்டும் மகிஷாசூரனுடைய தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது அந்த சிவலிங்கம் தான் தற்போது காமாட்சி தேவியார் கையில் ஒட்டிக்கொண்டது சிவலிங்கம் இருந்தபடியாலும், இதற்குமுன்பல காலமாக மகிஷாசூரனுடைய கண்டத்தில் சிவலிங்கம் இருந்தபடியாலும். இதற்குமுன் அவன் வரமுனி என்கிற சிவனடியாராக இருந்தாலும் சிவகடாட்சபதவியை அடைந்தவனாவான் எனவே அவனை கொன்றதினால் உமக்கு இந்த பாவம் நிகழ்ந்தது பாவம் தீர நவதீர்த்தங்களில் நீராட்சி சிவபூஜை செய்ய வேண்டும் என்று விவரித்தார் கௌதமர்.
துர்க்கையால் உருவாக்கப்பட்ட கட்கதீர்த்தத்தில் நீராடிய பின்னர் கையில் ஒட்டியிருந்த சிவலிங்கம் விடுபட்டது அதனை கரை மீது பிரதிஷ்டை செய்து பாபவிநாசகர் என்று பெயரிட்டு பூஜித்து வந்தார்.
கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும் நன்நாளில் மலைமேல் ஓரு பிரகாசம் உண்டாகி ‘பெண்ணே இம்மலையை இடமிருந்து வலமாக சுற்றி நடந்து வா” என்று சொல்லி அக்கணமே மறைந்தது அவ்வாறே அம்மனும் கிரிவலம் சென்று அதே இடம் வந்தடைந்தபோது சிவபெருமான். பார்வதியை அழைத்து தனது மேனியில் இடப்பாகம் அளித்து அர்த்தநாரிஸ்வரராக ஜோதி ரூபமாக காட்சியளித்தார்.
அகிலமே போற்றும் கார்த்திகை தீபப்பெருவிழா தோன்ற காரணமாக அமைந்த இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்று இந்த வடக்குவீதி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலய வளாகத்தில்தான் என்று ஸ்கந்தபுராணம் மற்றும் அருணாச்சலபுராண நூல்கள் சான்றளிக்கின்றன.
இன்று கூட கார்த்திகை தீபத்திருநாளில் காமிக, ஆகம விதிப்படி கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும்; நன்நாளில் சரியாக மாலை 6,00 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் கொடிமரத்திற்கு முன்னதாக ஸ்ரீஅர்த்தநாரிஸ்வரர் எழுந்தருளிய பின்னரே மலைமீது தீபஜோதி ரூபமாக காட்சியளித்தார்
செய்திக்குரிய படம் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாமாட்சியம்மன்
Leave a Reply