Save 20% off! Join our newsletter and get 20% off right away!

செய்யார் ஜோதி எம்எல்ஏவின் நூறுநாள் சாதனை

செய்யார் யூனியன் சேர்மனாக இருந்தவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் 20 வருடங்காக ஒன்றிய செயலாளராக இருக்கும் ஜோதி, மந்திரி எ.வ.வேலுவின் தயவில் வாய்ப்பு கிடைத்து எம்எல்ஏ ஆகி இருக்கிறார். எம்எல்ஏ சீட்டுக்கு பலர் முட்டி மோத, ஜோதி பிரகாசமாகி விட்டார். தொகுதியில் ஜோதியின் தீவிர ஆதரவாளர் விவசாய அணியை சேர்ந்த பைனான்சியர ஜம்போடை சீனிவாசன், பொழுது விடிஞ்சா ரெடியாகி மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தனுடன் கிளம்பிடுவார், மந்திரி எ.வ.வேலு ஊரில் இருந்தால் கிளம்பி மந்திரி தரிசனம் பார்க்க போயிடுவார் மேற்படி இருவரும் ஊரில் இல்லைனா செய்யார் எம்எல்ஏ அலுவலகத்தில் உட்கார்ந்து கொள்வார், தேடி வரும் திமுகவினர் தொகுதி மக்களுக்கு பொறுமையாக பதில் சொல்லுவார் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களை தவிர திமுகவினர் யாரையும் அருகில் சேர்ப்பதில்லை என்கின்றனர் உடன்பிறப்புகள். அனக்காவூர் யூனியன் பாமக சேர்மன் ராஜ்குமார் அன்கோவினர், கொஞ்சம் அதிமுகவினர் என பட்டியல் போட்டு திமுகவுக்கு கூட்டிகிட்டு வந்துவிட்டார். போன்ல கூப்பிட்டாலும், நேர்ல போய் கூப்பிட்டாலும் எந்த நிகழ்ச்சியானாலும் தவறாமல் கலந்து கொள்வார், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார் செய்யாரை தலைமையிடமாக கொண்டு புது மாவட்டம் உருவாக வேண்டும் என்கிற கோரிக்கையை சட்டமன்றத்தில் வைக்கவில்லை என்கிற வருத்தம் அனைத்து தரப்பின் மத்தியிலும் இருப்பதை பார்க்க முடிந்தது. செய்யார் யூனியன் வேலைகளை பிரித்து கொடுத்து திமுகவினர் பலனடைய செய்த விஷயத்தில் ஜோதிக்கு நல்ல பெயர் என்கிறாரகள். கால் நூற்றாண்டு அரசியல்வாதியான ஜோதி செய்யார் தொகுதி திமுக கோஷ்டி அரசியலில் தாக்குப்பிடித்துக் கொண்டு இருப்பதே பெரிய சாதனைகள்தான் இதை வேண்டுமானால் நூறு சாதனையில் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் திமுகவின் மூத்த நிர்வாகிகள். ஜோதி எம்எல்ஏ பிரகாசமாக செயல்பட நினைக்கிறார் நடக்குமா பார்க்கலாம்.