சவுக்கு சங்கர் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்கிறது என காங்கிரசார் போர் கொடி உயர்த்தி உள்ளனர்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இணையதளத்தில் பெண்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார் .பின்னர் அவரது வீடுகளில் போதைப் பொருட்கள் இருந்ததாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
கடந்த ஒரு வார காலமாக சவுக்கு சங்கர் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன
இந்த நிலையில் சவுக்கு சங்கருக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பு இருக்கிறது என்கிற ரீதியில் புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது
சவுக்கு சங்கரை இயக்குவது அண்ணாமலை தான் அவர்தான் பின்னணியில் இருந்து சவுக்கு சங்கருக்கு ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளார் எனவே சவுக்கு சங்கர் ர்மற்றும் அண்ணாமலை இடையே பேசிய செல்போன் பேச்சுகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்று காங்கிரசார் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்
இது குறித்து தமிழக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் காண்டீபன் சென்னை மாநகர காவல் துறையில் புகார் மனுவும் கொடுத்துள்ளார்
காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு முன்வர வேண்டும் இதற்காக தீவிரமாக பணியாற்ற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறிவந்த நிலையில் தற்பொழுது காங்கிரஸ் கையில் அண்ணாமலை சிக்கி இருக்கிறார் எனவே அண்ணாமலை மற்றும் சவுக்கு சங்கரை முன்வைத்து புதிய போராட்டங்களை நடத்துவதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply