Save 20% off! Join our newsletter and get 20% off right away!

டெல்லியில் திருநெல்வேலி அல்வா கடை!மக்களுக்கு அல்வா தரும் மத்திய அரசு?மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன் கிண்டல்!

திருநெல்வேலி அல்வா கடையை டெல்லியில் வைத்துள்ளது மத்திய அரசு, அல்வா கொடுப்பதை தவிர எந்த வேலையும் செய்யவில்லை – எவ்வளவு பேரிடர் வந்தாலும், எத்தனை பேர் செத்தாலும் கவலைப்
படுவதே கிடையாது ஒரு பைசா கூட எந்த மாநிலத்திற்கும் தரமாட்டார்கள் என, உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
அளித்தார்.
5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே. மூக்கையாத்தேவரின் 45 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார்., எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.,

பி.கே.மூக்கையாத்தேவர்-ன் 45வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட அதிமுக சகோதரர்கள் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளோம்.,

எங்களை போன்று 50 ஆண்டுக்களுக்கு முன்பே இளைஞர்களை வழிநடத்தி கல்வி கண் திறந்தவர்.,

கச்சத்தீவை மீட்டெடுக்க நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கடுமையாக போராடியவர்., அவரது புகழ் உயரும்., என பேசினார்.,

மேலும் தமிழ்நாடு பாடத்திட்டம் தொடர்பாக திமுகவும், ஆளுநரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் அதுவே போதும்.,

2026 ஆம் ஆண்டு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வருவார், எழுதி வைத்துக் கொள்ளுங்கள் உறுதியாக பி.கே. மூக்கையாத்தேவர் நினைவு மற்றும் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக நடத்தப்படும்., எனவும்,
முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள முதல்வர் தினசரி சைக்கிள் ஓட்டுகிறார், கோர்ட் போட்டுக் கொள்கிறார், தமிழ்நாட்டில் இருந்த போது சட்டை போட்டிருந்தார்.,

வந்த பின் தான் தெரியும், அறிக்கை வெளியிடட்டும், தாடிக்காரர் மோடி ஐயா சிங்கப்பூரில் சுத்துகிறார், அதற்கு போட்டியாக இவர் வெளிநாட்டில் சுத்திக் கொண்டிருக்கிறார் வரட்டும், யாரும் எதையும் மறைக்க முடியாது செய்யும் தவறுகளை எதிர்கட்சி தலைவர் மூலம் உரிய விளக்கங்கள் கிடைக்கும்.,
மத்திய அரசு கேரளாவிற்கும் சரி, நமக்கும் சரி அல்வா., அல்வா திருநெல்வேலியில் விக்கிறதை இப்போது டெல்லியில் வைத்துள்ளார்கள், அல்வா கொடுப்பதை தவிர எந்த வேலையும் செய்யவில்லை மத்திய அரசாங்கம். எவ்வளவு பேரிடர் வந்தாலும் எத்தனை பேர் செத்தாலும் மத்திய அரசு கவலைப்படுவதே கிடையாது ஒரு பைசா கூட எந்த மாநிலத்திற்கும் தரமாட்டார்கள்., இது தொடர்பாக போராட்டம் நடத்துவது சூழ்நிலையை பொறுத்து தான், மேற்கு வங்கத்தில் நடத்தது மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர், அது போன்று சந்தர்ப்பம் வந்தால் மின்னல் வேகத்தில் அறிக்கை கொடுப்போம், யாருக்கும் பயந்தவர்கள் இல்லை அதிமுகவினர்.
கள்ளர் பள்ளிகள் தொடர்பான போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டமாக நடத்தினோம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்குமோ இருக்கட்டும் 2026 ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரும் போது நிச்சயமாக கள்ளர் பள்ளி விவகாரத்தில் தீர்வு காணப்படும்., என ,பேசினார்.

– நா.ரவிச்சந்திரன்