3 நாட்களாக எங்களுக்கு மின்சார இல்லை, கழிவறை செல்லகூட தண்ணீர் இல்லை, 7 மாதங்களாக மின் அழுத்த பிரச்சினையால் பல மணிநேரம் தொடரும் மின் வெட்டு,தமிழகத்தில் இருந்து அத்திப்பட்டு கிராமம் போல் ஒதுக்கப்பட்டு விட்டோம் மக்கள் வேதனை, சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்களை காவல்துறையினர் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்!
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் அடுத்த சோனலூர் ஊராட்சிக்குட்பட்ட ட்ரீம் சிட்டி,படவேட்டம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கபட்டதால் சோனலூர் போலச்சேரி சாலையில் மறியல் செய்ய முற்பட்ட ஊர் மக்களை அங்கு விரைந்து வந்த தாழம்பூர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மின்வாரிய அதிகாரிகள் சீரான மின்சாரம் வழங்க உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது எங்களுக்கு அடிபடை வாழ்வே பாதிக்கபட்டுள்ளதாக பகுதி மக்கள் குமுருகின்றனர்.
கடந்த 7 மாதங்களாக குறைதழுத்த மின்சாரத்தால் நாங்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளோம்,மின்சாரம் ஒருநாள் இருந்தா பல நாள் பல மணிநேரம் இருக்காது.
மின்சாரம் அடிக்கடி தடைபடும்பொழுதெல்லாம் பல மணிநேரம் பொறுத்தே மின்சாரம் மீண்டும் வரும் மீண்டும் சில மணிநேரத்தில் மின்சார தடை ஏற்படும் இதற்க்கு காரணம் 250 ரிக்ஷிகி தேவைபடும் இடத்தில் 110 ரிக்ஷிகி மின்மாற்றி போடப்பட்டதே காரணம் என்கின்றனர் .
அப்பகுதி வாழ்மக்கள் கூறுகின்றனர்.
இதே போன்று அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது 2 நாட்களுக்கு முன் மின்மாற்றி ஒன்றினை புதிதாக மின்சாரதுறையினர் பொருத்தி சென்ற அன்று இரவே அந்த மின்மாற்றி வெடித்து அதில் இருந்து ஆயில் ஆனது,குழாயை திறந்துவிட்ட நீர்போல் தரதரவென கீழே பீச்சி அடித்தது.
அதன் பின்னர் மற்றொரு மின் மாற்றியை வைத்து பார்தனர் அதுவும் சேதமடைந்து நேற்றுடன் நான்கு நாட்களாக நாங்கள் இந்த மின்சாரம்மின்றி மிகவு சிறமப்படுகின்றோம்.
எங்களுக்கு இந்த நிலையில் இருந்து நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஊர்மக்கள் கோரிக்கை வைகின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக மின்துறையினருக்கு மனுக்கொடுத்துள்ளோம், சிஎம் செல்லுக்கும் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்தும் இது வரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்கின்றனர்.
சோனலூர் கிராம மக்கள் நாங்கள் அத்திபட்டி கிராமம் போல் தனித்து விடபட்டுள்ளதாக கிராம பெண்கள் தெரிவிக்கின்றனர்.
Leave a Reply