Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உசிலம்பட்டி -பாதையில் ஆக்கிரமிப்பு..கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, ஆணையூர் கண்மாய் வழியாக பூதிப்புரம் கிராமத்திற்கு செல்லும் பாதையை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவ்வழியாக பள்ளி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை நீடித்து வருவதாகவும், இது தொடர்பாக உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகம் முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பலமுறை கோரிக்கை விடுத்தும்,
 எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தர கோரி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆணையூர், மற்றும் கட்டக்கருப்பன்பட்டி கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து, விரைந்து வந்த உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன், உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமயிலான அதிகாரிகள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

– நா.ரவிச்சந்திரன்