Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மதுரை-கைப்பிடி சுவரை சரி செய்யகையெழுத்து இயக்கம்

மதுரையில் தெற்கு வாசல் மேம்பால கைப்பிடி சுவற்றினை சரி செய்ய மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மதுரை தெற்கு வாசல் விமான நிலைய சாலையில் என். எம். ஆர். சுப்புராமன் பாலத்தின்
சுவர் சிதலடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், விபத்து ஏற்படு முன்னரே சீரமைத்த நெடுஞ்
சாலைத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய 2-ம் பகுதி   சார்பில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்தில்
தெற்குப் பகுதி குழு சேனல் லெனின் மத்திய பகுதிகளின் ஜீவா மாவட்ட குழு உறுப்பினர் கோபிநாத்
 மாதர் சங்க பொருளாளர் சாந்தி தெற்கு கமிட்டி உறுப்பினர் பாண்டியராஜன், கண்ணன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெற்கு வாசல் என். எம். ஆர். சுப்பு ராமன் பாலத்தில், பழுதடைந்த கைப்பிடியை விரைந்து சரி செய்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்
திட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவாக தெற்கு வாசல் மேம்பால சுவற்றினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நா.ரவிச்சந்திரன்