மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில், வயலூரில் உறுப்பினர் அடையாள அட்டை
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு, ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன தலைமை தாங்கினார். உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ராஜேஷ் கண்ணா, ஏ.கே.பி. சுப்பிரமணியன், வக்கீல் ராஜசேகரன், மாவட்டப் பொருளாளர் திருப்பதி, ஒன்றிய
கழகச் செயலாளர்கள் காளிதாஸ், ரவிச்சந்திரன், கண்ணன், கொரியர் கணேசன், மாவட்ட அணி நிர்வாகிகள் சரவண
பாண்டி, சிவசக்தி சமயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மலையாளம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:
அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும் அதே
போன்று, திண்ணைப் பிரச்சாரங்களை செய்ய வேண்டும் என்று எடப்பாடியார் ஆணையிட்
டிருந்த அதன்படி நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் கார்ரேஸ் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்
திருந்தார். இதற்கு அரசின் பணம் எதுவும் செலவு செய்ய
வில்லை விளம்பதாரர்கள் நிதியால் நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார் .
ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கார் ரேஸ் நடத்த திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து,
இந்த பந்தயத்திற்காக 42 கோடி அளவில் அரசின் பணம் செலவழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து , எடப்பாடியார் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து, மிக்ஸாம் புயல் காரணமாக கார் ரேஸ் ரத்து செய்யப்பட்டது .
தற்போது, கார் ரேஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பல புகார்கள் வருகிறது போதிய பாதுகாப்பு இல்லை,
உயிர் இழப்பு ஏற்பட்டால், இதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுந்து வருகிறது. இது மட்டுமல்ல, தொழில் நிறுவனங்
களிடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த கார் ரேஸ் பந்தியதற்காக 25000 ரூபாய் முதல் ஒரு கோடி வரை கட்டாய வசூல் செய்யப்
படுகிறது. நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்கள் ஏற்படும் என்று தொழில் முனை
வோர்கள் குழம்பி வருகிறார்கள் . இந்த கார் ரேஸ் நடத்தும் தலைவர் உதயநிதி நண்பர் அகிலேஷ் ரெட்டி ஆவார் குறிப்பாக சென்னை, கோவை, கரூர் ,ஈரோடு போன்ற மாவட்டங்களில், வசூல் செய்யப்பட்டு வருகிறது . இந்த செய்தியை உண்மை இல்லை என்றால் பாரிசில் ஒலிம்பிக் போட்டி காண சென்றிருக்கும் உதயநிதி விளக்கம் தர முன் வருவாரா?
அதிமுக ஆட்சி காலத்தில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டது, தற்போது, காவல்துறை சுதந்திரமாக செயல்
படவில்லை. திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம், வட்ட செயலாளர்கள் முதல் மாவட்ட செயளாலர்கள் வரை காவல்
துறையை கைபாவையாக செயல் படுத்துவார்கள்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் சர்வ
சாதாரணமாக உலவுகிறது, புத்தகப்பை சுமக்கும் மாணவர்கள் கஞ்சாவை சுமக்கும் நிலை உள்ளது . அதேபோன்று, தமிழகத்தில் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது கத்தரிக்காய், வாழக்காய் வெட்டுவது போல மனிதர்களை வெட்டுகிறார்கள் இது குறித்து, எடப்பாடியார் தொடர்ந்து கூறினால், எந்த நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவில்லை அதனைத் தொடர்ந்து, அதிகாரிகளை தொடர்ந்து மாற்றம் நடைபெற்று வருகிறது . ஏற்கனவே,
65 அதிகாரிகள் இடம் மாற்றம் செய்தார்கள், அதனைத் தொடர்ந்து 46 அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தார்கள், தற்போது 56 அதிகாரிகள் இடமாற்றம் செய்துள்ளார்கள் .
மதுரையின் வளர்ச்சி, பாரம்பரிய குறித்து, மாமதுரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் .
மதுரை வளர்ச்சிக்கு சிறப்பு நிதி தருவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒரு பைசா கூட ஒதுக்காமல் தனது வார்த்தை ஜாலத்தால் நிறைவு செய்துள்ளார் .
இதே, மதுரைக்கு அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி உள்ளோம்,
மாமதுரை வாழ்த்து பேசிய முதலமைச்சர் இதே மதுரையில் அமைந்துள்ள அலங்காநல்லூர் தேசிய ஆலை திறக்க முன்வருவாரா? ஏற்கனவே, சட்டமன்ற தேர்தலில் அலங்கா
நல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை இயக்குவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி என்ன ஆச்சு? இதே கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்க 23 கோடி ரூபாய் அளவில் வழங்கப்பட்டது.
கடந்த அம்மா ஆட்சிக்
காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்
கிழமையும் தோறும் அம்மா திட்ட முகாம் நடத்தப்படும், அதன் மூலம் தாலிக் தங்கம் திட்டம், கறவை மாடுகள் திட்டம், மடிக்கணினி தட்டம், பட்டா மாறுதல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு ஏறத்தாழ 66 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் அம்மா ஆட்சியில் மட்டும் 24 லட்சம் பேருக்கு
பட்டா வழங்கப் பட்டுள்ளது,
இந்த திட்டத்தை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நிறுத்தி
விட்டு அதை உல்டாவாக நான் முதல்வன திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாணவர்களுக்கு வழங்கிய மடிக்
கணித்திட்டத்தை ரத்து செய்துவிட்டனர், இலவசமாக வழங்கப்படும் சைக்கிள் கூட தரமில்லதாக உள்ளது, தமிழகத்தில் கல்வி
துறை பின் தங்கியுள்ளது இதை மாற்றம் செய்ய தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை செய்து வருகிறார் என, பேசினார்.
-நா.ரவிச்சந்திரன்