மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில்,
ஆடி கடைசி வெள்ளிையையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வாடிப்பட்டி அருகே, தாதம்பட்டி
மேட்டு பெருமாள் நகர் ஐயப்பன் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்து,
சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
11 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 12 மணிக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை, கோயில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்து சிறப்பாக செய்யப்பட்டது.
11 மணிக்கு வரலட்சுமி நோன்பு கடை
பிடிக்கப்பட்டு,
101திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், கலந்து கொண்ட பெண்களுக்கு திருமாங்கல்யம்,கண்ணாடி,
மஞ்சள், வளையல்கள், ஆடை தானம் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜைகளை, டாக்டர் ராஜேஸ் வரி செய்தார் இதன் ஏற்பாடுகளை, அண்ணாமலையார் டிரஸ்ட் கோபிநாத் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். குலசேகரன்
கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை செய்து சிகப்பு பட்டு உடுத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மேட்டுநீரேத்தான் துர்க்கை அம்மன் கோவிலில், சந்தன காப்பில் காமாட்சியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு கூழ் ஊற்றி வளையல்கள் வழங்கப்பட்டது. மேட்டு
பெருமாள் கோவிலில் வரலட்சுமி பூஜையொட்டி, அம்மனுக்கு 21 அபிஷேக ஆராதனை
அர்ச்
சனைக
ளுடன், மலரனை அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply