Save 20% off! Join our newsletter and get 20% off right away!

திருவாரூர்-கொலை வழக்கு…ரவுடியை சுட்டுபிடித்த போலீஸ்

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை காலில் சுட்டு பிடித்த காவல்துறையினர்

திருவாரூர் மாவட்டம் கலப்பால் கிராமத்தில் கடந்த 9ம் தேதி முன்பகை காரணமாக மாரிமுத்து என்பவரை மூன்று பேர் கொண்ட நபர்கள் நடு ரோட்டில் அறிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் கொலை செய்ய கடந்த இரண்டு மாத காலமாக திட்டம் தீட்டியதாக ஒரு பெண் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பல நபர்களை இந்த வழக்கில் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று நீடாமங்கலம் அருகே மறைந்த ரவுடி பூவனூர் ராஜ்குமார் சமாதி அருகே ஆறு பேர் கொண்ட கும்பல் வழிபறி செய்வதற்காக நின்று கொண்டிருந்ததாக நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சந்தோஷ் குமார் அங்கு இருந்த ஷியாம், தயாநிதிமாறன், தென்னரசு, பிரேம்குமார், மாணிக்கம் உள்ளிட்ட ஐந்து நபர்களை பிடித்தனர். இந்த நிலையில் மனோநிர்மல்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் நீடாமங்கலம் அருகே ஆதனூர் அரசு மதுபான கடை பின்புறம் மனோ நிர்மல்ராஜ் இருப்பதாக நீடாமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் மற்றும் மன்னார்குடி நகர காவல் நிலைய காவலர் விக்னேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு சென்று மனோ நிர்மல்ராஜை பிடிக்க முயன்ற பொழுது கையில் வைத்திருந்த அறிவாளால் மனோ நிர்மல்ராஜ் காவலர் விக்னேஷின் வலது கையில் அறிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார்.

உடனடியாக உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து தப்பி ஓடிய மனோ நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடியின் வலது காலில் சுட்டு பிடித்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயம்பட்ட காவலர் விக்னேசையும் சுடுபட்ட ரவுடி மனோ நிர்மல்ராஜ் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு அனுமதித்தனர். தொடர்ந்து இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று காயம் பட்ட இருவரையும் பார்வையிட்டு காவல்துறையினரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இதே போன்ற குற்றம் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையில் எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

-செந்தில்