நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மஞ்சக்கம்பை மானியா டா திருக்கோயில் அருகே உள்ளது தான் டிக் லேண்ட் லீஸ் இந்தப் பகுதியில் சுமார் 55 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அனைவருமே ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்தப் பகுதிக்கு மஞ்சக்கம்பையில் இருந்து கொலக்கம்பை செல்லும் சாலையில் பிரிந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்து செல்ல வேண்டும் டிக்லேண்ட் பகுதிக்கு இப்பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் அன்றாடம் தேயிலை தோட்டங்கள் மற்றும் காப்பி தோட்டங்களில் புரியும் தொழிலாளர்கள் ஆவார்கள் இந்த பகுதியானது மேலூர் ஊராட்சியின் ஏழாவது வார்டு பகுதியாகும் மேலூர் ஊராட்சியில் ரேணுகா தேவி தலைவராகவும் துணைத்தலைவராக நாகராஜ் என்றவரும் உள்ளனர் இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த துணைத் தலைவர் நாகராஜ் இந்த கிராமத்திற்கு சாலை அமைப்பதற்காகவே இரண்டு முறை உள்ளாட்சி தேர்தலில் நின்று முதல் முறை தோற்று இரண்டாவது முறை அன்ன போஸ்டாக வெற்றி பெற்றார் வெற்றி பெற்று என்ன ஆகப்போகிறது இப்பகுதிக்கு சாலை கூட அமைத்து தராமல் தலைவரும் ஊராட்சி நிர்வாகமும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது..
தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் தொகுதியில் இப்படி ஒரு சாலை இல்லாத அத்திபட்டி கிராமம் இருப்பது சுற்றுலாத்துறை அமைச்சருக்கு தெரியுமா தெரியாதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
துணைத் தலைவர் நாகராஜ் எதற்காக தேர்தலில் நின்று வார்டு உறுப்பினராக வெற்றி பெற்று துணைத்தலைவராக பதவியும் ஏற்று சொந்த கிராமத்திற்கு சாலை அமைக்க படாத பாடு பட்டு உள்ளார் கடைசியில் நபார்டு திட்டத்தின் கீழ் 2 கிலோமீட்டர் சாலையை ரூபாய் ஒரு லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் காங்கிரட் சாலை அமைத்து தனது சொந்த கிராமத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார் மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது இதனை கருத்தில் கொண்ட நாகராஜ் பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் தற்போது ஒன்பது வீடுகள் கட்டிக் கொண்டு இருக்கிறார் மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் 9 வீடுகளுக்கு அனுமதி வாங்கியுள்ளார் சொந்த மண்ணிற்கு செல்ல சாலை இல்லாத நிலையில் இருந்த அப்பகுதி மக்கள் தற்பொழுது நாகராஜை வெகுவாக பாராட்டுகின்றனர் தற்போது இந்த டிக்லேண்ட் பகுதியில் சாலை மின்சாரம் குடிநீர் தெரு விளக்கு என அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வர மூன்று மாதமே உள்ள நிலையில் எதற்காக தேர்தலில் நின்று வெற்றி பெற்றாரோ நாகராஜ் அந்தப் பணிகளை நிறைவு செய்த நிம்மதியில் தற்போது உள்ளதாக தெரிவித்தார்.
– ரவிக்குமார்
Leave a Reply