Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மாவட்ட செயலாளர் காந்தியா வினோத் காந்தியா? – இராணிப்பேட்டை திமுக குமுறல்

அரசியலில் வாரிசு என்பது புதியதல்ல அதிலும் திராவிட கட்சிகளில் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் இருக்கும் ஆளுங்கட்சியாக திமுக இருந்தால் வாரிசு அரசியல் உச்ச கட்டத்தில் இருக்கும் உதாரணத்திற்கு, தமிழக கைத்தறி துணிநூல்துறை மந்திரி காந்தியை சொல்லலாம். இராணிப்பேட்டை மாவட்ட செயலாளராகவும் இருக்கும் காந்தி கட்சியில் சீனியர் என்பதால் மந்திரி சபையில் வாய்ப்பு கொடுத்து கௌரவப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஏற்கனவே மாவட்டத்தில் அதிருப்தியில் இருந்த திமுகவினர் காந்தி மந்திரி ஆனதால், பழைய மாதிரி இருக்கமாட்டார் மாறிவிடுவார் என்று நம்பினர். ஆனால் முதல் வேலையாக காந்தி தன்னுடைய வாரிசுகள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி இருவரையும் அரசியலில் இறக்கிவிட்டார். சந்தோஷ் காந்தி பட்டும்படாமலும் வாரிசு அரசியலை கையில் எடுத்துக் கொள்ள, பெரிய மகன் வினோத் காந்தி தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். எந்த அரசு பதவியிலும், மக்கள் பிரதிநிதியாகவும் இல்லாத சந்தோஷ் காந்தி இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா தாலுக்கா அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் விழாவில் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கினார் இந்த விஷயம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு போக, மந்திரி நீங்களா உங்க பையனா? என்று காந்தியிடம் கோபத்தை காட்டி இருக்கிறார்.

வினோத் காந்தியை மாவட்டம் முழுவதும் கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுப்பிவைக்கிறார். அப்பொழுது வினோத் காந்தியை வரவேற்காத, ஏற்றுக் கொள்ளாதவர்களை கட்சியில் மகனை விட்டே ஓரங்கட்டுகிறார் மந்திரி காந்தி! தான்சார்ந்த துறை அதிகாரிகளை மகன் பக்கம் திருப்பி விடுவதோடு, அதிகாரிகள் மகனுக்கு முறைவாசல் செய்வதை ரசிக்கிறார். வினோத் காந்திக்கு கட்சியில சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளர் பதவியை வி£ங்கி கொடுத்து இராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து பக்கத்து மாவட்டங்களுக்கு அனுப்பி, திமுக நிர்வாகிகளுக்கு போன் பண்ணி என் பையனை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா என்கிறார். உச்சகட்டமாய் அதிகாரிகளை கூட்டிகிட்டு போய் தோல் தொழிற்சாலை பகுதிகளில் ஆய்வு பண்ணுகிறார் வினோத் காந்தி! இளைய இராணிப்பேட்டையார் என்று போஸ்டர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தில சுவர்களை அலங்கரிக்குது. தன்னையும் தன் மகனையும் ஏற்றுக் கொள்ளாதவர்களை யோசிக்காமல் உடனே ஓரங்கட்டிவிடும் காந்தியால், வாழந்தவர்களைவிட வீழ்ந்தவர்கள் அதிகம்! பாராஞ்சி சௌந்தர், திருப்பாற்கடல் சுந்தரம், ஆற்காடு பாண்டுரங்கன், சோளிங்கர் மூர்த்தி, புதுப்பட்டு சண்முகம், சேஷசலம், வீராணம் சண்முகம், பிஞ்சி பிரகாஷ், கத்திவாடி அண்ணாதுரை, இராணிப்பேட்டை குட்டி கிருஷ்ணமூர்த்தி என பெரிய பட்டியல் நீளுது. இப்பொழுது லேட்டஸ்டா காந்தியும் அவர் மகன் வினோத் காந்தியும் குறி வைத்திருப்பது வாலாஜா திமுக நகர செயலாளர் புகழேந்தியை பாரம்பரியமான திமுக குடும்பத்தை சேர்ந்த புகழேந்தி சுயமரியாதைக்காரர் வர இருக்கிற ஊரக நகர்புற தேர்தலில் வாலாஜா நகரமன்ற தலைவராக போட்டியிட திட்டமிட்டிருக்கிறார் உள்ளூர் செல்வாக்கு உள்ளவர், அதனால வாலாஜா நகர திமுக நிர்வாகிகளை போனில் கூப்பிட்ட வினோத் காந்தி, புகழேந்தியை பொறுப்பிலிருந்து எடுக்கனும் கடிதம் கொடுங்க என்று வாங்கி கையில் வைத்துக் கொண்டு, புகழேந்தியை மாவட்ட அலுவலகத்திற்கு கூப்பிட்டு, நீங்க சரியில்லையாம் கட்சிக்காரங்க கடிதம் கொடுத்திருக்காங்க நான் நீக்கினா நல்லா இருக்காது அதனால நீங்களே ராஜினாமா பண்ணிடுங்க என்று செல்லமாக மிரட்ட, எதற்கும் அசராத புகழேந்தி விஷயத்தை அறிவாலயம் வரை கொண்டு போயிருக்கிறார் வாரிசு அரசியல் ஆட்டம் கொஞ்சம் ஓவராகத்தான் போகுது போல! அறிவாலயத்தார் கவனத்திற்கு..