மதுரை-
கோயில்களில் நவராத்ரி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் இன்று நவராத்திரி திருவிழா துவங்கியதை முன்னிட்டு நவராத்திரி கொலு அமைக்
கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன, இதே போன்று, உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள தேவி கரு
மாரியம்மன் கோவில், மேலப்புதூர் பத்திரகாளியம்மன் கோவில், மாதரை கிராமத்தில் உள்ள பத்திர
காளியம்மன் கோவில் என பல்வேறு கோவில்களில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு, அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், பிரளயநாத சாமி, துரௌ
பதையம்மன், தென்கரை அகிலாண்டேஸ்வரி, மதுரை அண்ணாநகர்,வைகை காலனி,வைகை விநாயகர், சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள், மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர், சௌபாக்யா விநாயகர், சித்தி விநாயகர், கோமதி புரம், ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயங்களில், நவராத்ரியை முன்னிட்டு, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
– நா.ரவிசந்திரன்
Leave a Reply