Save 20% off! Join our newsletter and get 20% off right away!

விழுப்புரம்-மீனவர் துறையில்,சலுகைகள் மானியங்களில்… ஊழல்கள்?போராட்டம் நடத்த தயாராகும் மீனவர்கள்?

விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கோட்டக்குப்பம் முதல் மரக்காணம் வரை சுமார் 19 மீனவர்கள் கிராமங்கள் உள்ளன.இதில் மீன்பிடி மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். மீன்வளத்துறை அலுவலத்தில் கடந்த 4 நான்கு வருடங்களாக ஒரே இடத்தில் விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனராக நித்திய பிரியதர்ஷினி அவர்கள் பணிபுரிந்து வருகிறார்.இந்த மாவட்டத்தில் 1300 நாட்டுப் படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் 930 நாட்டுப் படகுகளுக்கு அரசு சார்பில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது.19 மீனவ கிராமங்களில் படகில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கும் பெட்ரோல் பங்க் கைப்பாணிக்குப்பத்தில் உள்ளது . தனக்கு சாதகமாக மீனவர்களுக்கு பெயரளவில் டீசல் வழங்கிவிட்டு,பெரும்பாலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு டீசல் கொடுக்காமல் போலியான உறுப்பினரை சேர்த்து அவர்கள் பெயரில் கள்ளத்தனமாக தனி நபர்களுக்கு விற்பனை செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கொள்ளை இலாபம் பார்க்கின்றனர் என மீனவர்கள் கிராமங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுபற்றி மீனவர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அந்த புகார் யார் தெரிவிக்கிறோமோ அந்த மாவட்ட உதவி இயக்குனராக உள்ள நித்ய  பிரியதர்ஷினி அவர்களே விசாரணை அதிகாரியாக செயல்படுவதாக கூறப்படுகிறது.இதனால் மீனவர்கள் எவ்வித புகார் தெரிவித்தும் பயணில்லை என தெரிகிறது.மேலும் மீனவர்களின் பயனுள்ள கோரிக்கைகள் புகார்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தவுடன் புகார் தெரிவிக்கும் மீனவர்களின் அரசின் நலத்திட்ட உதவிகளை ஏதாவது காரணம் காட்டி தடுத்தும் , புகார் தாரரை மீனவ கிராமத்தில் தவறாக பொய் வதந்திகளைபரப்பி  அருகில் உள்ள மீனவ கிராமத்திற்கும் அவர்களுக்கும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி கலவரத்தை தூண்டும் நிலைக்கு மாவட்ட உதவி இயக்குனர் உதவியாளர் மணிகண்டன், மரக்காணம் மீன்வள துறை ஆய்வாளர் சிவ சூரியன், கோட்டக்குப்பம் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் பெருமாள்’, மேற்பார்வையாளர் அறிவு வேந்தன்,கடல் சட்ட அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் பிரகாஷ்,காவலர் அரிதாஸ் மற்றும் சாகர் மித்ரா பணியாளர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பல்வேறு முறைகேடுகள் ஊழல்கள் குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.மத்திய அரசின் சாகர் மித்ரா திட்டத்தின் கீழ் ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் மீனவர்/ மீனவ மகளிர் நலத்திட்ட உதவிகளை பெற்று வாழ்வாரத்தை மேம்படுத்த அரசு வழங்குகிறது. இதனை பயணாளிகளான மீனவர்களுக்கு கொடுக்காமல் மீன்வளத்துறையில் பல்வேறு நிலைகளில் ஊழலுக்கு துணை போகும் மீன்வள துறை ஊழியர்களான அறிவு வேந்தன் , நந்தினி, பிரகாஷ்,பிரித்தா,அரிதாஸ் ஆகியோருக்கு கொடுத்துள்ளனர். இது நாள் வரை இருசக்கர வாகனம் பயனாளிகளுக்கு கண்ணில் கூட காண்பிக்கவில்லை என கூறப்படுகிறது.இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை  இயக்குனர் அவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பயனாளிகள், பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மீனவ நலச்சங்கங்கள் புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

– வா.சி.குமார்