Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கன்னியாகுமரி-பயனாளிகளின் பணம் எங்கே?அதிகாரிகள் கைவரிசை?திணரும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்…

 அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலூகா, அஞ்சு கிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்குளம் பகுதியில் 384 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு பல கோடி மதீப்பில் கட்டப்பட்டது. கடந்த 20. 11.2023 அன்று தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின்  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.அப்போது குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சேது ராமலிங்கம் தலைமை தாங்கினார். அஞ்சு கிராமம் செயல் அலுவலர் திலகம் முன்னிலை வகித்தார். அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ,  பேரூராட்சி துணைத் தலைவர் காந்தி ராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மேலும் வீட்டிற்கு 1லட்சத்து 2000 பணம் செலுத்தி வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது இதனையடுத்து பணம் கட்டி காத்திருந்தவர்களுக்கு சாவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.  அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழை எளிய சொந்த வீடு இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து சுமார் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் தொகை நிர்ணயிக்கப்பட்டது
 இதனை அடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட  மக்கள் பணத்தைச் செலுத்தி  வீடுகளுக்கான உத்தரவையும், சாவியையும் பெற்றுக் கொண்டனர். வீட்டில் குடியிருந்தவர்கள் தங்களது வசதிக்கேற்ப அதிக பணம் செலவழித்து டைல்ஸ் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து குடியிருந்து வந்தனர். கரண்ட் இனைப்பு,வீட்டுவரி ,தண்ணீர் கட்டணம் ஆகியவற்றையும் உத்தரவு நகலை சமர்பித்து  பெற்று, அணுபவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு  பகுதிக்கு சென்று  சுமார் 36 வீடுகளைச் சார்ந்தவர்களிடம் உங்களுக்கு  இங்கு வீடு கிடையாது. நீங்கள் அரசாங்கத்திற்கு பணம் கட்டவில்லை. திருட்டுத்தனமாக போலி சாவிகளை பயன்படுத்தி அத்துமீறி வீட்டில் வசித்து வருகின்றீர்கள். வீட்டை காலி செய்யவேண்டும், தவறும் பட்சத்தில் உங்கள் மீது போலீஸீல் புகார் செய்து,ந வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் . காலி செய்யாவிடில் வேறு பூட்டு போடப்படும் எனவும் கூறி உள்ளனர்.  கம்மல்,மூக்குத்தி,பொட்டு போன்ற தங்க நகைகளை விற்று   வட்டிக்கு பணம் வாங்கி அரசுக்கு செலுத்தியுள்ளனர்  சொந்த வீட்டில் குடியேறிவிட்டோம் இனி வாடகை பிரச்சனை இல்லை என நிம்மதி பெருமூச்சு விட்டவர்களின் வாழ்க்கையில் அதிகாரிகளின் அறிவிப்பு இடியாய் விழுந்தது. மிகவும் ஏழைகள், அடித்தட்டு மக்கள், சொந்த வீடு இல்லாதவர்கள்,தினக்கூலிகளாக  சுமார் ஒரு வருடம் குடியிருந்தவர்களை திடீரென வீட்டை காலி செய்ய சொல்வதின் மர்மம் என்ன என்று தெரியவில்லை.  அரசிபல் அதிகாரம் இல்லாமை,வறுமையால்,தினக்கூலிகளான குடியிருந்த மக்கள் என்ன செய்வது என்று வழிதெரியாமால் விழி பிதுங்கி நிற்பது கவலையளிக்கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு பெண் கூறும்பொழுது  சொந்த வீடு வாங்கும் ஆசையால் வட்டிக்கு பணம் எடுத்து வீடு வாங்கினேன்.சுமார் 1லட்சத்து 6ஆயிரம் ரூபாய் பணமாக  செலுத்தினேன் தற்பொழுது வீடு கிடையாது என கூறியதால் என்ன செய்வது என தெரியவில்லை. அரசு நல்லமுடிவு எடுக்காவிட்டால் உயிர்விடுவதை தவிர வேறு வழியில்லை என கண்ணீருடன் கூறினார். .மேலும் அடுக்குமாடி குடியிருப்போர் மெயின்டனஸ் செலவுக்காக மாதந்தோறும் குடியிருப்போர் சங்கத்திற்கு ருபாய் 250  செலுத்த வேண்டும், பஸ் வசதியோ,சாலை வசதியோ, தெருவிளக்கு வசதியோ இன்றி ஊருக்கு புறம்பாக உள்ள இப்பகுதியில் வீட்டை காலிபண்ண சொல்வது அதிகாரிகளின் குளருபடிதான் என தெரிகிறது. மேலும் இது குறித்து இந்திரா நகரை சார்ந்த சமூக சேவகர் முத்துக்குமார் பேசும்பொழுது  மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா அவர்கள் குடியிருப்போர் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை குறித்து நேரில் விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம்   தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.  ஏழை மக்கள் குடியிருக்க உத்தரவாதம் வழங்க வேண்டும். இல்லையெனில் மாவட்டம் தழுவிய மாபெரும் போராட்டம்   நடைபெறும் என்றார்.இதுகுறித்து தமிழக அரசின் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ராஜகோபால் அவர்களை தொடர்பு கொண்ட போது எங்கள் அலுவலகம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருப்பதால் குடியிருப்பு பிரச்சனை குறித்து தெரியாது  மேலும் விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொள்ளுங்கள் எனகூறினார்.வீட்டிற்கு செலுண்தவேண்டிய பணம் டிடி மூலம் மட்டுமே செலுத்தவேண்டும் என அறிவித்துவிட்டு பணமாக கையில் வாங்கியது ஏன். பணத்திற்கு ரசீது கொடுக்காமல் புத்தகத்தில் கையெழுத்து வாங்கியது ஏன். பயணாளிகளை குடியேற்றி விட்டு தற்போது காலி பண்ண சொல்லி மிரட்டுவது ஏன் ஏற்கணவே குடியிருப்போரின் வீட்டிற்கு புதிய நபர்களுக்கு வீடு ஒதுக்கியதின் மர்மம் என்ன? முதல்ல அந்த வீடுகளை ஒப்படைக்கும்போது வழங்கப்பட்ட உத்தரவு போலியானதா.என  அடுக்கு அடுக்கான பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டாலே அடுக்குமாடி குடியிருப்போருக்கு அச்சம் தீரும்

-பா.மனோகரன்