Save 20% off! Join our newsletter and get 20% off right away!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்…ராஜ கோபுரத்தின் மீது ஏறிய போதை ஆசாமி

புகழ்பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி,  ராஜகோபுரம் புணரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருக்கோவிலின் நடை சாற்றப்படும் போது 192அடி உயரமான  ராஜகோபுரத்திலிருந்து‌ உலறல் சத்தம் கேட்டிருக்கிறது.இதனை அறிந்த பக்தர்கள் உடனடியாக திருக்கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்து பார்த்தபோது கோபுரத்திலிருந்தவாறு மது போதையில் ஒருவர் உளறியபடி இருந்தது தெரிய வந்தது.

இதனையெடுத்து காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில்  தீயணைப்பு துறை வீரர்கள் ராஜகோபுரத்தின் மீது ஏறி அங்கு போதை தலைக்கு ஏறிய நிலையில் அலப்பறை செய்து கொண்டிருந்த  போதை ஆசாமியை பத்திரமாக கீழே இறக்கினர்.

இதனையெடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மேல் ஒட்டி வாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பதும் போதையில் செய்வதறியாது கோவில் கோபுரத்தின் மீது ஏறியதும் அவர் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள 16கால் மண்டபம் பகுதியில் தங்கி வருவதும் தெரியவந்தது.

இதனையெடுத்து அவரை காவல்துறையினர் (நைய புடைத்து) எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இரவு வேளையில் மது போதை ஆசாமி ஒருவர் ராஜகோபுரத்தின் மீது ஏறி அலப்பறையில் ஈடுபட்ட சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.

– காமாட்சி