Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்-மத்திய அரசை கண்டித்து கடையடைப்பு..வியாபாரிகள் முடிவு.

தமிழக முழுவதும் வாடகை கடைகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, நாளை சோழவந்தானில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு நடத்தப்படும் என,
அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்
பட்டுள்ளது. இது குறித்து இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் கூறும்போது: சோழவந்தானில் உள்ள வணிக நிறுவனங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனங்
களுக்கு, ஜிஎஸ்டி வரி விதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை 29 .11 .24. வெள்ளிக்
கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சோழவந்
தானில் உள்ள அனைத்து வணிக கடைகளும் அடைக்கப்படும் என ,
முடிவு செய்துள்ளோம் இதற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என , கேட்டுக்
கொண்டனர். சோழவந்தான் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் ஆதி பெருமாள், பொருளாளர் கேசவன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து, இன்று மாலை முறைப்படி அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்
கப்படும் என்று தெரிவித்தனர்.

– நா.ரவிசந்திரன்