திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சட்டமன்ற தொகுதியில் வெம்பாக்கம், செய்யார், அனக்காவூர் என்று மூன்று ஒன்றியங்கள். அதிமுகவில் ஒன்றிய செயலாளர்களாக இருப்பவர்கள் சரிவர செயல்படவில்லை என்பது தொண்டர்களின் ஏகோபித்த புகார் அதுசரி, ஒன்றிய செயலாளர்கள் கட்சிப்பணி செய்யாம அப்படி என்னதான் பண்றாங்க? வாங்க அதிமுக தொண்டர்கள் சொல்றதை கேட்கலாம்…
வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமூலன் என்கிற பையாக்குட்டி சிப்காட்ல கம்பெனி ஸ்கிராப் எடுத்து சம்பாதிக்கிற வேலையில முழுநேரமும் பிஸியாக இருக்கிறார் மேற்கு ஒன்றியம் வயலூர் இராமநாதன் ரியஸ் எஸ்டேட் அதிபர் நேரம் கிடைச்சா கட்சிப்பக்கம் வந்துபோவார். செய்யார் வடக்கு ஒன்றியம் மகேந்திரன் மாவட்டம் தூசி மோகனுக்கு எதிர்ப்பாளர், தெற்கு ஒன்றியம் அருகாவூர் அரங்கநாதன் வெள்ளையும் சொள்ளையுமா வலம் வருகிறார் கட்சிக்காரன் பாக்கெட்டை முறைச்சி பார்ப்பார் டீ கூட கட்சிக்காரன்தான் வாங்கி தரணும். அனக்காவூர் கிழக்கு சி.துரை இரண்டு கவுன்சிலர்களை திமுகவுக்கு அனுப்பி வச்ச நல்ல மனுஷன்! மேற்கு ஒன்றியம் குணசீலன் முன்னாள் எம்எல்ஏ ஒன்றியத்தில் கட்சிக்கும் இவருக்கும் உடம்பு சரியில்லை.
அதிமுக ஒன்றிய செயலாளர்களின் கட்சி செயல்பாடுகள் இந்த லட்சனத்தில் போயிகிட்டு இருக்க, வெம்பாக்கம் ஒன்றியத்தை திமுகவுல மூன்றா பிரிச்சிட்டாங்க, அதே மாதிரி அதிமுகவிலும் பிரிக்கணும் அறுபத்தி நாலு பஞ்சாயத்து தாராளமா மூன்றாபிரிக்கலாம் கிழக்கு, மேற்கு, மத்தியம் என்று பிரித்து இரண்டு வன்னியர்கள், ஒரு ஆதிதிராவிடர் என்று மூன்று ஒன்றிய செயலாளர்களை அடையாளம் காட்டி இருக்கிறார்கள். அதே மாதிரி வெம்பாக்கம் ஒன்றிய அதிமுகவில் கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிரித்து இரண்டு வன்னியர்களை போட்டாச்சி மத்திய ஒன்றியத்தை பிரித்து ஆதிதிராவிடர் ஒருவரை ஒன்றிய செயலாளர் ஆக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர். ஏழாச்சேரியை சேர்ந்த ரகுவை சுட்டிக்காட்டும் அதிமுகவினர், ரகுவின் மனைவி கோமதி வெம்பாக்கம் யூனியன் சேர்மனாக இருந்தவர், அப்பொழுது இப்போதைய மாவட்ட செயலாளர் தூசி மோகன் துணை சேர்மனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி அதிமுக ஒன்றிய செயலாளர்களின் செயல்பாகள் கவலைப்படும்விதமாக இருக்க, மாவட்ட செயலாளர் தூசி மோகன், கட்சி இருக்கற இருப்புல இதெல்லாம் இப்ப முக்கியமா என்று மௌனமாக இருக்கிறார். மாவட்ட செயலாளர் பதவி மீது கவனமாக இருக்கும் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், நான் மாவட்ட செயலாளரா ஆனா அதிமுகவை மாவட்டத்தில ஆக்டீவா வச்சிக்குவேன் செயல்படாத நிர்வாகிகளை மாத்திட்டு செயல்படும் நிர்வாகிகளை நியமிப்பேன் என்று வாயால வடைசுட்டுகிட்டு இருக்கிறார். செயல்படாத நிர்வாகிகளை தவிர்க்கலாம் செயல்படும் நிர்வாகிகளை வரவேற்கலாம் இது அதிமுக தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு மேற்படி செய்தி சமர்ப்பணம்.
– ஆலவாயர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply