இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர் கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறை யே இவர்களுடைய பொறுப்பாகும்.
இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனுக்கு உலகம் முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்க ப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழி பாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னி றுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்க ளையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்க ள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும்.
பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது.
ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையா க மதித்தனர் நம் முன்னோர்கள். ஆகவே முத் தொழில் முதல்வனான சிவனின் தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்ட னர்.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூத ங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனை களும் காட்டப்படுகிறது. பஞ்ச பூதங்களை பற்றித்தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயரிலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளன ர்.அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.
அவை வருமாறு:-
1. நிலம்- காஞ்சீபுரம், திருவாரூர்.
2. நீர்- திருவானைக் காவல்
3. நெருப்பு- திருவண்ணாமலை
4.வாயு- திருக்காளகஸ்தி (ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது).
5. ஆகாயம்- சிதம்பரம்
இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமா ன திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.
சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோ ரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ் வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.
சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்தி ரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.
இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப் படுகிறது.🙏
பரணி தீபம்
கார்த்திகை பரணி தீபம் எந்த நேரத்தில், எப்படி ஏற்றுவது.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பரணி நட்சத்திரம் சிறப்புக்குரியது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உள்ளது.
கார்த்திகை மாதம் முழுவதுமே இறை வழிபாட்டிற்கான விசேஷமான மாதம் தான். ஆனால் இந்த வருட பரணி தீபம், கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை சிவபெருமானின் விசேஷச நாளான பிரதோஷத்துடன் சேர்ந்து வருவது இன்னும் சிறப்பினை தருகிறது.
இப்படியான இந்த மாதத்தில் கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் ஏற்றப்படும் தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும்?, ஏற்றும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க….
🙏பரணி தீபம் ஏற்றும் முறை எப்படி வந்தது?🙏
முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நாளாக கருதப்படுவது பரணி தீப நாள் தான்.
இந்த பிறவியில் நாம் வாழ்கின்ற காலம் முழுவதும் ஒளிமயமான வாழ்வை பெறுவதற்காகவும், இவ்வுலக வாழ்க்கை முடிந்த பிறகு மேல் உலகிற்கு செல்லும் வழியிலும், மேல் உலகிற்கு சென்ற பிறகும் இருளில் சிக்கி தவிக்காது, ஒளிமயமாக நாமும் நமது முன்னோர்களும் இருப்பதற்காகவே பரணி தீபம் ஏற்றின.
🙏வீட்டில் பரணி தீபம் ஏற்றும் முறை 🙏
ஒரு சிறிய தட்டிலோ அல்லது வாழை இலையிலோ வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் விளக்கும் ஏற்ற வேண்டும்.
அதோடு தனியாக ஒரு தாம்பாலத்தில் 5 விளக்குகளை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். அனைத்து விளக்குகளும் அனைத்து திசை நோக்கி எரியும் என்பதால் திசை கணக்கு கிடையாது.
ஐந்து என்பது பஞ்ச பூதங்களும் நமது உடலிலும், வெளியிலும் சரியாக இருந்து நமக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காகவும், சிவபெருமானின் பஞ்ச தொழில்களை விளக்குவதாலும் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
🙏திருவண்ணாமலையில் பரணி தீபம் 🙏
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.
பரணி தீபம் ஏற்றும்போது உங்கள் வீட்டு வாசலில் இரண்டு தீபம், பூஜை அறையில் தனியாக ஐந்து நெய் தீபத்தை ஏற்றுவது சிறப்பு. மனிதன் வாழ்க்கையில் நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் தவறுகளில் இருந்து விமோசனம் பெற இந்த பரணி தீபத்தை ஏற்ற வேண்டும்.
*🙏தீபம் ஏற்றும் பலன்கள்*🙏
பரணி தீபத்தன்று சிவனுக்கு பூஜைக்கு தேவையான வில்வம், பூ போன்றவற்றை பறித்துக் கொடுத்தாலும், மாலையாக கட்டிக் கொடுத்தாலும், விளக்கு ஏற்றி வழிபட்டாலும், அபிஷேகத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்தாலும் கூட சிவனை நினைத்து விரதமிருந்து வழிபட்ட நல்ல பலன்கள் கிடைக்கும்🙏
🙏கார்த்திகை கூம்பு🙏
🙏கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள்.
கார்த்திகை தீபத் திருநாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள்.
பின்னர், சுவாமிக்கு தீபாராதனை செய்து, அந்த சுடரால் இந்த சொக்கப்பனைகளை கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.🙏
🙏மகாதீபம்🙏
🙏மலையில் தீபம் ஏற்றஅண்ணாமலையானை வணங்கிய பின், பர்வதராசகுல மரபினர் தீபமேற்றப்பெற்ற நெருப்பைப் பானையில் வைத்து, அது அணையாதவாறு மலைக்குக் கொண்டு செல்கின்றனர். அதிர்வேட்டுகளின் சத்தம் வானைப் பிளக்க, தீப்பந்த வளையங்கள் மலையை நோக்கிக் காட்டப்பட, பரணி தீபத்திலிருந்து நெருப்பைப் பெற்றுச் சென்ற பர்வதராசகுல பரம்பரையினர் மலை மேல் தீபம் ஏற்றுகின்றனர்.
திருவண்ணாமலை தீபம்
இறைவன், உலக மக்களுக்கு ஒளி வடிவில் காட்சிதருகிறார். மலை மேல் ஏற்றப்பட்ட மகா தீபம் பதினோரு நாள்கள் எரிகிறது. தீபம் எரியும் கொப்பரை ஆறடி உயரம் கொண்டது. சுமார் 3,000 கிலோ நெய், 1,000 மீட்டர் துணி நாடா, ஐந்து கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. ஐம்பூதங்களில் ஒன்றான ஜோதி (அக்னி) வடிவாக எழுந்தருளி உலக உயிர்களைக் காக்கும் தத்துவத்தைத் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.
தேவர்களும்,
முனிவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை ஜோதி வடிவில் காட்சி கொடுக்க வேண்ட, ‘கார்த்திகை மாதம், கார்த்திகை தினத்தன்று மலை உச்சியில், நான் ஜோதி மயமாக காட்சியளிப்பேன்’ என்றும், ‘இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும், தீப தரிசனத்தைக் கண்டவர்களின் குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞானத்தைத் தரவல்ல கார்த்திகை தீபத் திருவிழாவினை வீடுகளில் தீபம் ஏற்றியும், கோயில்களில் தீபம் ஏற்றியும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாம் கொண்டாடி, இறைவனின் இறையருளைப் பெற வேண்டுவோம். திருவண்ணாமலையில் தீப தரிசனத்தைக் கண்ட பிறகே, அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றப்படுகிறது.🙏🙏🙏
🙏அறிவியல் பின்னணி: 🙏
கார்த்திகை தீபம், தமிழகத்தில் கொண்டாடப் படும் முக்கிய விழாக்களில் ஒன்று. கார்த்தி கை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது.
தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்தி கை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
நமது சங்க இலக்கியங்களில் இதை பற்றிய குரிப்புகள் காணபடுகின்றன. தமிழகத்தில் பழைமையான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. இந்த விழாவை பற்றி நம் மதங்களில் சொல்லபடு கின்ற கருத்துக்கள் நீங்கள் அறிந்தவையே.
ஆனால், இந்த விழாவின் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மி ல் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்க ள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து.
தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர்கள் பெரிதும் பரவும் இந்த கார்த்திகை மாதத்தில நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீப திருநாள் வழி வகை செய்கிறது.
கார்த்திகை தீபத்தில் பயன் படுத்த படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து வரும் நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது.
இந்த உண்மை அறியாமல், “பழைய வழக்கம் நமக்கு எதற்கு, சாஸ்திரத்துக்கு ரெண்டு விளக்கு ஏற்றுவோம்” என்று இல்லாமல் இல்லம் நிறைய விளக்கு ஏற்றி நம்மை காத்து கொள்வோம்.
அண்ணாமலை எம் அண்ணாஉண் போற்றி…
கண்ணாரமுதக் கடலே போற்றி..
அண்ணாமலையார் திருவடிகளே சரணம்…
– மோகன்தங்கசாமி
Leave a Reply