தூத்துக்குடியின் பழம்பெயர் திருமந்திர நகர் என்பதாகும். திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் சோலை மிகுந்த இவ்வூரைக் கண்டு, மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார் என்றும் அதுவே சங்கர ராமேஸ்வரர் கோயிலாகும். தூத்துக்குடி மாவட்டம் அரசியல் கட்சி கோஷ்டிகளுக்கு பெயர் போன மாவட்டமாகும். திமுக பொருத்தவரை, தொகுதி எம்.பி. கனிமொழி, மாவட்ட செயலாளர்களான சிட்டிங் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், வக்கீல் ஜோயல் என பல கோஷ்டிகள் உள்ளது. இது தவிர எம்.எல்.ஏ., ஓன்றிய செயலாளர்கள் என கோஷ்டிகளூம் களத்தில் உள்ளன. மாப்பிள்ளையூரணி பஞ்.தலைவர்- தூத்துக்குடி திமுக கிழக்கு ஓன்றிய செயலாளர் சரவணக்குமார், திமுக பிரமுகர் அம்பாசங்கரின் மனைவி வசுமதி அம்பாசங்கர் – தூத்துக்குடி யூனியன் சேர்மனாக உள்ளார். ஆக அனைவரும் திமுகவினராக உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பஞ்., கோமஸ்புரம் கடற்கரை சாலையில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இசிஆர் மார்க்கெட், அங்காடி என்ற பெயரில் 21 வணிக வளாகமும், ஆட்டுசந்தையும் செயல்படைவதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக தடபுடலாக நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கடைகளை திறந்து வைத்தும், ஆடு விற்பனையும் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் சிவன் கோவில் குத்தகை நிலத்திற்கு போலி ஆவணங்களை வழங்கிய செயல் அலுவலர் தமிழ்ச்செல்வியை பணி நீக்கம் செய்ய வேண்டும். என தூத்துக்குடியை சேர்ந்த அக்ரி.பரமசிவம் என்பவர், கடந்த 2ம் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், “
தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் மாநகராட்சி பகுதிகள், மாப்பிள்ளையூரணி , வேப்பலோடை, புதியம்புத்தூர், ஏரல் பெருங்குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் தச்சநல்லூர் உள்பட பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இதில் சமீபத்தில் தூத்துக்குடி யூனியன், மாப்பிள்ளையூரணி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கோமஸ்புரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் புல எண் 130/3 மற்றும் 130/4 ஆகியவை சுமார் 6.51 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்டதாகும்.
மேற்கண்ட கோவில் நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின், தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலரின் முழு நிர்வாக கட்டுபாட்டின் கீழ் உள்ளது. இக்கோவில் நிர்வாக செயல் அதிகாரியாக இருப்பவர் திருமதி வீ.தமிழ்ச்செல்வி. இவரின் நிர்வாக பணியின் கீழ்தான் ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி கோமஸ்புரம் திருக்கோவில் நிலத்தில், 5 ஆண்டுகளுக்கு 12வூ20 அளவு கொண்ட மற்றும் 10வூ12 அளவு கொண்ட சுமார் 122 வணிக கடைகளும், பல்வேறு இருப்பு வணிக நிறுவனங்களும், ஆட்டுச்சந்தை வணிகம் ஏற்படுத்திட பல்வேறு வகையில் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், விதிமுறைகளை மீறியும் போலி ஆவணங்கள் வழங்கியுள்ளார்.
மேலும் கோவிலின் புஞ்சை நிலத்தில் வணிக நோக்கில் சட்ட விதிகளை மீறி செயல்பட அதன் புல எண்: 130/3 ன் 4.60 ஏக்கர் நிலத்திற்கு ரூ 10,000/- (பத்தாயிரம் ரூபாய் மட்டும்) முன் தொகையாகவும், புல எண்: 130/4 ன் 1.92 ஏக்கர் நிலத்திற்கு ரூ 10,000/- (பத்தாயிரம் ரூபாய் மட்டும்) முன்தொகையாக பெற்று, அக்கோவில் நிலத்தில் மின் இணைப்பு, ஊராட்சி மற்றும் வருவாய் நிர்வாக ஆவணங்கள் பெற உடந்தையாக இருந்துள்ளார்.
எனவே, ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர்
வீ.தமிழ்ச்செல்வி என்பவர் அமைச்சர், ஒன்றியக்குழு சேர்மன், ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், மின்வாரிய அதிகாரிகள் என பல்வேறு அரசு அதிகார மிக்கவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு, பல லட்சம் ரூபாய் பொருளாதார வருவாய் பெறும் நோக்கில், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் அரசுக்கு பல்வேறு வகையில் பல லட்சம் ரூபாய் வருவாய் நிதியிழப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறையின் உயரதிகாரிகள் மேற்கண்ட இந்து சமய அறநிலையத் துறையின், தூத்துக்குடி சிவன்கோயில் நிர்வாக செயல் அலுவலர் வீ.தமிழ்ச்செல்வி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணிநீக்கம் செய்ய வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக ரெடியாக பதிலை கூறியுள்ளனர். இது தொடர்பாக செயல் அலுவலர் தமிழ்செல்வி கூறுகையில், என்னுடைய உயர் அதிகாரிகளை கேட்காமல், நான் எந்த கருத்தையும் கூற முடியாது” என சுருக்கமாக முடித்துக் கொண்டார். சிவன் சொத்து குல நாசம் என்பது போல் தான்தோன்றித் தனமாக பணியாற்றும் அலுவலர்கள் இனியாவது திருந்துவார்களா?
– ஆலவாயர்
Leave a Reply