செந்தில்பாலாஜியின் வேகம்..அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்..-கொங்கு மண்டல நிலவரம்!

கரூர்,  கோயம்புத்தூர், ஈரோடு,  திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதியிதல் திமுக வின் அமைச்சர் செந்தில் பாலாஜி யின் ( ஆட்சி ) அதிகாரம் ஒழிக்க பாரதிய
ஜனதா கட்சி  ணி ஞி துணையுடன் பெரும்பாடுபட்டது ஊரறியும்  ,  ஆனால் அது முடியவில்லை என்றே கூறலாம் .

எதிரியின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு சண்டையிடுவது ஆண்மை யா என்றும் ஒரு சில  உ . பி   கள் நம்மிடையே சற்று காட்டமாகவே கூறினர் , ஆனால் அப்பிடியும் நோக்கம் நிறைவேறவில்லை .

அமைச்சர் திரு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து கொண்டே பல வேலைகளை தமது நம்பிக்கை க்கு உரியவர்கள் மூலம் செய்து வந்தார் . அவர் நேரில் இருக்கும் போது என்ன என்ன காரியங்கள் செய்வாரோ அதற்கு சற்றும் குறையாமல் காரியங்கள் நடந்தது  உ  பி  களுக்கு மிகவும் சந்தோசம் .

புழல் சிறையில் இருந்த போதும் , அதற்கு முன்பும்   பின்பும் செந்தில் பாலாஜின் நடவடிக்கைகள் முதல்வருக்கு மிகவும் திருப்தி .
குறிப்பாக பாஜக வின் முக்கிய  திட்டமான மகாராஷ்டிர மாநிலம் போல்  இங்கே ஒரு ஏக்நாத்  ஷிண்டே  , அஜித் பவார் ரை உருவாக்க  பாஜக பெரும்பாடுபட்டது ஊரந்த  ரகசியம் ,  ஆனால் பாஜக வின் கனவை தவிடு பொடியாக்கினார் ( ஒரு லாரி மண்ணை கொட்டினார் ) செந்தில் பாலாஜி .
இந்த சம்பவத்தின் மூலம்
முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான இடத்தை பிடித்தார் .

இதற்கிடையில் தற்பொழுது  அ.தி.மு.க வில்  உள்ள  முக்கியஸ்தவர்கள் மற்றும்  சில பல தொண்டர்களும் செந்தில் பாலாஜி பக்கம் வரப்போவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது .
இதற்கான வேலைகள் அவர் புழல் சிறையில் இருக்கும் போதே நடந்து கொண்டிருந்தது  , இப்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு வேகமெடுத்துள்ளது .

அமைச்சர் செந்தில் பாலாஜி யின் இந்த காய் நகர்த்தலுக்கு  எடப்பாடி பழனிச்சாமி யின்  செயல் / நிலைப்பாடு  இன்னும் அவரின் வேலையை சுலபமாகக்கி  உள்ளது .
அதாவது  பாஜக வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறினாலும் , நேரிடையாக எதிர் குரல் எழுப்பவில்லை , ( நாடாளுமன்ற  தேர்தல் முதல்  இன்று அமித்ஷா வின் அம்பேத்கர் – கடவுள் கருத்து வரை )

எடப்பாடி பழனிச்சாமி யின் இந்த பாஜக  வுடனான மென்மையான போக்கு பல  அ தி மு க   உ  பி களுக்கு உடன்பாடு இல்லை , குறிப்பாக
எம் ஜி ஆர்   மற்றும் ஜெயலலிதாவின்  அபிமானிகள் , இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால்
பட்டியல் சமூகத்தை சேர்ந்த  அதிமுக வினர் எடப்பாடி பழனிச்சாமி யின் இந்த பாஜக  மீதான  பாசம் !!!  சுத்தமாக பிடிக்கவில்லை .

இது தமிழ்நாடு முழுக்க பொருந்தும் என்றாலும் கூட  ,  செந்தில் பாலாஜி அவர்களின் காய் நகர்தலுக்கு இது மிகவும் உதவிகரமாக உள்ளது . மேலும் அதிமுக ஆட்சி காலத்திலும் அமைச்சராகவும் தலைமைக்கு மிக நெருக்கமா இருந்தவர் என்பது செந்தில் பாலாஜி க்கு கூடுதல் பலம் .

விரைவில் கரூரில் அதிமுக வின் கூடாரத்தில் இருந்து திமுக  பக்கம்   உ   பி  கள் தாவ தயாராக உள்ளனர் ,  அதிமுக வில் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வேலை செய்வதற்கு கூட ஆள் பற்றாக்குறை ஏற்படலாம் என்று பேசப்படுகிறது .

இது எந்த அளவுக்கு உண்மை என்பதை அரசியல் பார்வை யாளர்களுக்கு நன்றாகத் தெரியும் .

இடையில்  ஈரோட்டில் இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால்  ?  அங்கும் செந்தில் பாலாஜி யின்  பங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ,  அதற்கும் மேலே நடந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை .

இது மட்டுமல்லாமல் குறைந்த வயதில் 20,000 புத்தகங்களுக்கு மேல் படித்த ஒரு அறிஞருக்கு  பதில் குடுக்கவும் , கேள்வி கேட்கவும் வேலைகள் நடப்பதாகவும் நம்பத் தகுந்த வாட்டாரங்களில் இருந்து நமக்கு தகவல் .

பணம் மட்டும் இருந்தால் அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடு உடன் பிறப்புக்கள் கணக்கு போட்டுக் கொண்டு காய் நகர்த்தி வருகிறார்கள் .
அதில் அவர்களுக்கு காய்விழுமா இல்லையா என்பதை தேர்தல் நெருங்கும் சமயத்தில் தெரிய வரும் .  இது இப்படி இருக்க  பா.ஜ.க , அ.தி.மு.க  வினரும்  தங்கள் பங்கிற்கு காயையை நகர்த்தி வருகின்றனர் ,

சிங்கம் கூண்டில் இருந்த போதே ஒன்றும் புடுங்கமுடியாத இவர்கள்  இன்று என்ன செய்யமுடியும் , ஒன்னும் செய்யமுடியாது என்ற ஆழமான நம்பிக்கையில் கழக  
உ பி  களின் உற்சாகம் தெளிவாக தெரிவதாக திருவாளர் பொதுமக்கள் கூறுகின்றனர் .

– மதி