திருவள்ளூர்-
பொது தேர்வுகளின்போது,
புத்தகத் திருவிழா
மாணவ மாணவிகள்…
பொதுமக்களை ஈர்க்கவில்லை…?
மாணவ மாணவிகள் புறக்கணிப்பு ஆசிரியர்கள் திண்டாட்டம் திறப்பு விழாவின் போது அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்பு பொதுமக்களை ஈர்க்காத புத்தகத் திருவிழா திருவள்ளூர் மாவட்டத் தலைநகரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று அமைச்சர்கள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவின் போது அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் திமுக நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டு திறப்பு விழா குறுகிய நேரத்தில் நிறைவு பெற்றது. இதில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை அரங்கு முழுவதும் காலியாகவே இருந்தது. எப்போதும் எந்த அரசு நிகழ்ச்சி நடைபெற்றாலும் மாணவ மாணவிகளை அழைத்து வந்து அரங்கத்தை நிரப்புவது தொடர் சம்பவமாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுகின்ற சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பொது தேர்வில் கவனம் செலுத்துவதால் பெரும்பாலான பள்ளிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. தேர்வு காலங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள் தற்போது புத்தகத் திருவிழாவில் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் திருவிழா பணிகளுக்காக ஒரு வார காலமாக முடக்கி விடப்பட்டுள்ளதால் மாவட்ட இதர பணிகள் நடைபெறாமல் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எந்த அலுவலகத்திலும் அதிகாரிகளும் அலுவலர்களும் அலுவலகத்தில் இல்லாததால் வெறிச்சோடி கிடக்கின்றன.
முதன்மை கல்வி அலுவலகம் மாவட்ட கல்வி அலுவலகம் அனைத்து அலுவலர்களும் புத்தகத் திருவிழாவில் முழுகி இருப்பதால் வருகின்ற அரசு தேர்வுகளில் முழு கவனம் செலுத்த முடியாமல் திணறுகின்றனர், புலம்புகின்றனர். ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறையால் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு அரை கண்காணிப்பாளராக பட்டதாரி ஆசிரியர்கள் பணி அமர்த்துகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் அனைத்து வகுப்பு தேர்வுகளும் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருந்த நேரத்தில் புத்தகத் திருவிழாவிற்கு நாள்தோறும் மாணவர்களை அழைத்து வருகின்ற நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா துவக்கப்பட்டது.அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கடமைக்கு புத்தகத் திருவிழாவை நடத்தியே தீர வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது…
-கே.ரவிச்சந்திரன்
Leave a Reply