மத்தியில் ஆட்சி கட்டிலை; அலங்கரித்து வரும் பாஜக நாட்டுக்கு என்று அவர்கள் (ஆர் எஸ் எஸ் மற்றும் உயர் வகுப்பினர்) கெத்து காட்டி வருகின்றனர். விமர்சனம் செய்பவர்களை விளாசுவதும், வசைபாடுவதும், அவமானப்படுத்துவதும், வாடிக்கையாகி விட்டது. ஒன்றிய அரசை பகைத்தால் அவ்வளவுதான். காங்கிரஸ் ஆட்சியை எப்படியும் வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிய பாஜக மீண்டும் வீழ்த்திவிட்டது. இது மக்கள் தேர்வு செய்தது எங்களை யாராலும் அசைக்கவோ ,ஆட்டவோ முடியாது என இந்து, சாதி, மத அமைப்புகள் தொடர்ந்து கொக்கரிப்பதை பார்தது வருகிறோம். இத்தகு ஆட்சியில் இவ்வளவு சோதனை எதுக்கு என்று மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். காரணம், தினமும் ஏதேனும் ஒரு சீட்டை கையில் வைத்துக்கொண்டு அப்பாவி மக்கள் அரசு அலுவலகம் நோக்கி படை எடுப்பது தொடர்கிறது. அது ஆதார்,ரேஷன் ,வாக்காளர் அட்டை, பான்கார்டு இப்பிடி விதவிதமாக செல்வதை பார்க்கிறோம் வளரும் பாரதம், ஒளிரும் இந்திய என எதையாவது ஒன்றை சொல்லி காலம் ஓடுகிறது.இதற்கு முழு காரணம் யார் என்றால் எதிர் க்க ட்சிகள்தான். நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என் நினைத்து பாஜகவை அரியணையில் ஏற்றிவி ட்டுள்ள னர். இத்தகு செயலுக்கு காங்கிரசை மட்டுமே எதிர்க்க வேண்டும் என ஒற்றை காலில் நின்றதன் விளைவை இன்று அனைத்து எ திர்க்கட்சிகளும் நன்கு அனுபவித்து வருகின்றனர்.இனியும் அவர்கள் ஒன்றாக இணையாவிட்டால் நாடு எங்கு செல்லும் என தெரியவில்லை.சுயநல அரசியல் லாபத் தா ல் இன்று மக்கள் தவிக்கின்றனர். தமிழக அரசு நீட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றால் சிறுபிள்ளையாக ஓடி ஒளிகிறாரார். எனவே அவர்களை வைத்து எதுவோ நடத்த முயல்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் மோடி இருக்கிறார். 17 அங்குல மார்பு வேண்டும் என ராகுலை கிண்டல் செய்தவர் இன்று பரிதாபமாக இருக்கிறார். இதற்கு பல்வேறு உதாரணங்களை கூறலாம்.
பஞ்சாப் உள்ளிட்ட 5மாநிலத்தேர்தலை எண்ணி , பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி , ஹ§சைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்று கட்சிநிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல்வேறு பிளான்களுடன் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றார்.
சாலை மார்க்கமாக மோடி பயணம் மேற்கொண்டார். ஹ§சைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன் மேம்பாலம் அருகே சென்றபோது விவசாயிகள் திரளாக நின்றுள்ளனர். அவர்கள் சாலையில் குறுக்கே மறித்து மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த எண்ணி இருந்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த மோடி பாதுகாவலர்கள் செய்வதறியாமல் திகைத்து விட்டனர். இந்த சூழலால் மேம்பாலத்தில் மோடியின் கார் சுமார் 15-20 நிமிடங்கள் காக்கவைக்கப்பட்டது. மோடிக்கு மிகப்பெரிய அவமானம் என்பதைவிட பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடு என்றே கூறலாம்.
இப்படி ஒரு சம்பவம் வரலாற்றில் இது முதலாவது என பாஜகவினர் பதறுகின்ற்றனர். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது என்பதால், இப்படி ஒரு பிரச்சனையை பெரிது படுத்துகிறார்கள் என்று பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சுமத்துகிறது. பஞ்சாபில் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு சுமார் ஒரு வருட காலம் தலைநகர் டெல்லியில் குடும்பத்துடன் போரட்டம் நடத்திய விவசாயிகள் தங்களின் முடிவில் உறுதியாக இருந்தனர். அவர்களை எள்ளி நகையாடிய பாஜக அரசு அடக்குமுறையை கையாண்டது. ஒரு கட்டத்தில் லக்கிம்பூர் என்ற இடத்தில விவசாயிகளின் மீது மத்திய அமைச்சரின் மகன் கார் மோதியது. ஓதில் 7 விவசாயிகள் சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . விளைவு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்தார். ஒரு வழியாக பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் இன்னும் அந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சுமதி வருகின்றனர். இந்த நேரத்தில்தான் மோடி அவமானப் படுத்தப்பட்டுள்ளார் என புகார் எழுந்துள்ளது. 20 நிமிடம் காக்க முடியாத பிரதமர் ஒரு வருடமாக போராட்டம் நடத்திய விவியசாயிகளின் நிலைமையை எண்ணி பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
இதில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி பஞ்சாப் அரசை கலைக்குமாறு ஆளும் கட்சி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கமுடியாத பஞ்சாப் அரசின் செயல் திட்டமிட்டது. காங்கிரஸ் பழி வாங்கி விட்டது எனவும் பாஜகவினர் கோரி வருகின்ற்றனர். மத்தியில் ஆ ட்சி பொறுப்புக்கு வந்துள்ள பாஜக முதலாளிகளின் கட்சி என்பது அதன் செயல்பாடுகளின்மூலம் தெரிகிறது என்று கம்யூனிஸ்ட் காட்சிகள் குற்றம்சாட்டுவதை கவனிக்க வேண்டும். பணம் மதிப்பிழப்பு முதல் அவர்கள் செய்துவரும் அத்தனை காரியங்களுமே சாமானியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. வங்கி பணம் பரிமாற்றத்தில் மக்களின் பணம் அநியாயமாக சுரண்டப்படுகிறது. ஜி.எஸ்.டி, பெட்ரோல், காஸ் விலை உயர்வு என அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது உண்மை. பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் கூச்சல் போடும் பாஜக மக்களின் பிரச்னைகளை கைவைக்க வேண்டும். அசுர பலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தால், எதையும் செய்துவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றாத வரை மக்கள் விரைவில் ஆட்சியை அகற்றுவார்கள் அது பெரும் கொந்தளிப்பை உண்டாகும் என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து.
பஞ்சாபில் விவசாயிகள் காரை மறித்த சம்பவத்தில் போலீசார் மெத்தனம் காட்டவில்லை எனவும், விவிசாயிகள் பாஜக கொடியுடன் வந்ததாகவும் திடீர் என்று கொடியை வீசிவிட்டு விவசாயிகள் போராடியதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளதை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. இப்படி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்த ஒரே பிரதமர் என்ற பெருமை மோடிக்கு உண்டு என்பது அரசியல்வரலாற்றில் தீராத வடுவாக அமைந்துவிட்டது.
– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்
