Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உசிலம்பட்டி-அரசு மருத்துவமனையில்டாக்டர்கள் பற்றாக்குறை?

மதுரை அருகே உசிலம்பட்டி அரசு,  மாவட்ட தலைமை  மருத்துவர்கள் பற்றாக்
குறை காரணமாக, நோயாளிகள் பலமணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெரும் அவல நிலை நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, இந்த மருத்து
வமனைக்கு , சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  தினசரி புற நோயா
ளியாகவும், உள் நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றன.
இந்த மருத்து வமனையில், கடந்த சில மாதங்களாக மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக புறநோயாளியாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை
 பெற்று செல்லும் அவல நிலை நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது, மழை காலம் என்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.
மருத்துவமனையில் உள்ள சொர்ப்ப அளவிலான மருத்துவர்களே கூடுதல் பிரிவுகளையும் சேர்ந்து பார்க்கும் நிலை உருவா
கியுள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறையினர் நடவடிக்கை எடுத்து விரைவில் மருத்துவர்கள் பற்றாக்குறையை செய்து பொது
மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

– நா.ரவிசந்திரன்