தூத்துக்குடி வேற ‘லெவல்’

தூத்துக்குடி என்றாலே ப்ரு கெத்து உண்டு. வெட்டு, குத்து என்று பேர் உண்டு. ஒன்றரையணாவுக்கு பெறாததற்கு எல்லாம் போட்டுத்தள்ளுவது தூத்துக்குடியன்களின் ஹாபி. இப்போது முத்து நகர் மாவட்ட பெண்களும் இதற்கு முன்னுதாரணமாகிவிட்டனர்.

கடந்த  ஒரே வாரத்தில் 3 தூத்துக்குடி குடும்ப ஸ்திரிகள் கணவர்மாரை சித்திரவதை செய்தும் போட்டுத்தள்ளியும் வீராங்கனைகள் பட்டியலில் இடம்  பிடித்துவிட்டனர்.

தூத்துக்குடியில் இனிகோ என்பவர்  பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும் என்று 13 வருடமாகவே அவரது மனைவி மரியவினோ  டார்ச்சர் செய்து வந்திருக்கிறார்.  அதற்கு மறுத்த கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.அதுமட்டுமல்ல, கணவனின் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவியும்  அவரை கொல்ல முயற்சி செய்திருக்கிறார். கணவர்தான் என்றாலும் எத்தனை முறைதான் பொறுத்துக்கொள்ள முடியும்? இனிகோ போலீசுக்கு போய்விட, இப்போது மரியவினோ கைதாகி ஜெயிலில் இருக்கிறார்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் அட்டகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் ஒரு கூலி தொழிலாளி. ஆனாலும் அட்டகாசப் பேர்வழி. இவர்  மனைவி பெயர் சுப்புலட்சுமி.. ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.

ஆறுமுகம் மதுப்பழக்கம் உடையவர். குடித்துவிட்டு சலம்புபவர்.  சம்பவத்தன்று இரவும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.. அப்போது தம்பதிக்குள் தகராறு நடந்துள்ளது.. பொறுத்து பொறுத்து பார்த்த சுப்புலட்சுமி, கணவரை சத்தம் போடாமல் இருக்க சொல்லி மிரட்டி உள்ளார்.  ஆனாலும் ஆறுமுகம் தொடர்ந்து போதையில் உளறி கொண்டே இருந்திருக்கிறார்.. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, போர்வையை எடுத்து ஆறுமுகத்தின் கழுத்தை சுற்றி இறுக்கியதாக கூறப்படுகிறது… இதில் ஆறுமுகம் மயங்கிவிட்டார்.. பிறகு காலையில் ஆறுமுகத்தை தட்டி எழுப்பும் போதுதான் அவர் அசைவற்று கிடந்துள்ளார். இதையடுத்து, தாளமுத்து நகர் போலீசுக்கு சுப்புலட்சுமியே தகவல் தந்தார்.. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகத்தை மீட்டு தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சுப்புலட்சுமியை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி.. 32 வயதாகிறது.. இவரும்  கூலி தொழிலாளி தான். மனைவி பெயர் இந்திரா.. 28 வயதாகிறது.. இவர்களுக்கு வைத்திஷினி முகாசினி என்ற 12 மற்றும், 8 வயது பெண் குழந்தைகள் உள்ளனர். மாடசாமிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.. அதிலும் கடந்த சில மாதங்களாகவே போதையில் வீட்டிற்கு வரும் மாடசாமி, இந்திராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது… இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. சம்பவத்தன்றும் இப்படித்தான் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் மாடசாமி.. வழக்கம்போல் இந்திராவை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனால் இந்திரா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்… சிறிது நேரத்தில் சாப்பாடு போடு என்று சொல்லிவிட்டு, மாடசாமி சாப்பிட உட்கார்ந்துள்ளார்.. ஆத்திரத்தில் இருந்த இந்திரா, மாடசாமிக்கு சாப்பிட வைத்திருந்த சால்னாவில், விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தினை கலந்து வைத்துவிட்டார்.. பரோட்டாவையும் சால்னாவையும் சாப்பிட்டு கொண்டிருந்த மாடசாமி, திடீரென மருந்து நாற்றம் வருவதை உணர்ந்துள்ளார்.. பதறிபோன அவர் உடனடியாக வெளியே எழுந்து ஓடினார். அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி கதறினார். அவர்களும் சால்னாவை முகர்ந்து பார்த்துவிட்டு, விஷம் இருப்பதை உணர்ந்தனர்.. அடுத்த கொஞ்ச நேரத்தில் மாடசாமி மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார்.. அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எட்டயபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *